Bigg Boss Tamil 7 | Day 5 | Review | ‘ஒரு நெறியாளர் இல்லாத நீயா நானா தான் இந்த எபிசோடு’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐந்தாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: விஷ்ணு, அனன்யா கான்வர்சேஷன் – வேக் அப் சாங் – கூல் சுரேஷ்சின் போராட்டம் – பவா கன்வர்சேஷன் வித் பிக்பாஸ் – டாஸ்க் – விஜய் ஹீரோயிச பேச்சு – விசித்ரா VS ஜோவிகா
இன்றைய எபிசோடு விஷ்ணு மற்றும் அனன்யாவின் கான்வர்சேஷனில் இருந்து துவங்கியது. இருவரும் ரிலேசன்சிப் என்ற டாப்பிக்கை தான் ஆராய்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ’என்னுடைய கண்ணாடியில் தெரியும் ’நான்’ என்னும் கேரக்டரை எப்போது இன்னொருவரிடம் பார்ப்பேனோ அப்போது காதல் செய்வேன்’ என அனன்யா சொன்ன விதம் அழகாக இருந்தது. கடைசியில் இருவரும் கை குலுக்கி கொண்டு ப்ரெண்ட்ஸ் என்று கூறிக் கொண்டது ஒரு வகையில் நல்லது. இல்லையேல் இன்றே யூடியூப்களில் பிக்பாஸ் கிசுகிசுக்கள் துவங்கி இருக்கும்.
ஒரு பக்கம் குட்டி பாஸ் இல்லத்தில், 7 மணிக்கே எந்திரித்து விட்டு விசித்ரா காபிக்காக ஏங்கி கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் இரண்டு இல்லத்திலும் எல்லோருமே நல்ல உறக்கம். ஒரு 8 மணி அளவில் ‘காதல் கிரிக்கெட்டு, விழுந்துருச்சு விக்கெட்டு’ என வேக் அப் சாங் அலாரம் அடிக்கும் போது தான் அத்துனை பேரும் ’என்ன அதுக்குள்ளையும் விடிஞ்சிருச்சா’ என்பது போல எந்திக்கிறார்கள்.
கூல் சுரேஷ் கேமரா முன் வந்து நின்று கொண்டு செய்த தர்ணா ரசிக்கும் படி இருந்தது. ’இந்த மூக்குத்திய போட்டுக்கவா, இல்ல அந்த மூக்குத்திய போட்டுக்கவா’ என்ற கரகோஷத்துடன் போட்டியாளர்களும் கேமரா முன் நின்று அவருடன் இணைந்து நடத்திய தர்ணா காமெடியின் உச்சம். என்ன தான் அவர் பேச்சில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் கூட, அனைத்து போட்டியாளர்களுக்கும் இணக்கமானவராக மாறி இருக்கிறார் கூல் சுரேஷ்.
இடையே பவா, விசித்ரா குறித்த ஒரு குற்றத்தை பிக்பாஸ் முன் முன்வைக்கிறார். விசித்ராவும் யுகேந்திரனும் வருவதற்கு முன்னர், இந்த குட்டி பாஸ் வீடு நன்றாக தான் இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் வந்த பின்னர் போட்டியாளர்களையும் சரி, சமையல் அறையையும் சரி டாமினேட் செய்ய ஆரம்பித்து விட்டனர். சக வீட்டாளர்கள் அவர்கள் நினைத்ததை செய்ய முடியவில்லை என விசித்ரா குறித்து பவா கூறினார்.
அடுத்தகட்டமா ஒரு டாஸ்க், ரெண்டு வீட்டுல இருந்தும் ஒரு 3 பேர், அந்தந்த இல்லத்தார்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். அவங்க இதுவரை நடந்தவைகளை வைத்து, போட்டியாளர்களின் தவறை சுட்டிக்காட்டி, இந்த வீட்ட Improve பண்றதுக்காக இன்னும் என்ன என்ன பண்ணனும், என்ன என்ன பண்ண கூடாது என்பதை விளக்க வேண்டும். அவ்வளவு தான். நிச்சயம் பிக்பாஸ்சிற்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை இந்த டாஸ்க் அவ்வளவு சூடாகும் என்று, ஆனால் வீடே கொதித்தது.
பிரதீப் எப்போதோ கையில் ஷூவை கொண்டு செல்லும் போது அது விஜய்யின் மீது பட்டிருக்கும் போல, அது ஒரு எதேச்சையான நிகழ்வாகத்தான் இருந்திருக்கிறது. அந்த நிகழ்வு குறித்த நியாபகங்கள் கூட பிரதீப்பிற்கு இல்லை. ஆனால் விஜய் இந்த விடயத்தை வைத்து கொஞ்சம் ஹிரோயிசம் காட்டி விட்டார். ’இப்படியே பண்ணா எனக்கு கோவம் வரும். வந்தா மூக்க வாய உடைச்சி விட்டுருவேன் அப்புறம் ஆம்புலன்ஸ்ல தான் போகனும். எனக்கு தெரிஞ்ச பாசக்கார பசங்க வேற வெளில இருக்காங்க, தட்டிருவாங்க’ என ஒரு வன்முறையாளர் போலவே பேசி விட்டார்.
பின்னர் இல்லத்தார் அனைவரும் விஜய்யின் காரசார கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கடைசியாக தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு விஜய் அமர்ந்து விட்டார். அடுத்தகட்டமாக மணி பேசியது கொஞ்சம் பாயிண்டாக இருந்தது. அதை விட குட்டி பாஸ் வீட்டில் இருந்து நிக்சன் பேசியது முழுக்க முழுக்க டாஸ்க்கிற்கு பொருத்தமானதை பேசியது போல இருந்தது. அனன்யா, டாட்டூ மேட்டரை மீண்டும் இழுத்தது, சமையலில் விசித்ரா டாமினேட் செய்வதாக நிக்சன் கூறியது என இரண்டும் விசித்ராவை சற்றே கொஞ்சம் கோபமுற செய்தது.
பின்னர் விசித்ரா, தன்னை சாடிய ஒவ்வொருவருக்கும் பதில் கொடுத்தார். பதில் ஒவ்வொன்றும் கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. அவர் போட்டியாளர் என்பதை மறந்து விட்டு, ஏதோ தன் வீட்டில் இருப்பவர்களிடம் சாதாரணமாக பேசி மொழிவது போல பேசி தள்ளிவிட்டார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொருவர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு கட்டத்தில் விசித்ராவிற்கு எதிரான குரல் அனைத்தும் அவரின் கடுமையான டாமினேசனால் ஒடுங்கி விட, ஜோவிகாவின் குரல் மட்டும் அதை தாண்டியும் ஒலித்தது. யாரு வனிதா விஜயகுமார் அவளின் மகள் ஆச்சே. முடியுமா…!
இங்க கல்வினால நெறைய பேர் செத்துக்கிட்டு தான் இருக்காங்க, அந்த கல்வி இல்லாமலும் கூட நிறைய பேர் நல்லா தான் இருக்காங்க, நான் இங்க ஒரு போட்டியாளரா வந்து இருக்கேன். இங்க நான் யாருக்கும் எந்த உறவுமுறையும் இல்ல. நாங்க தான் இங்க விளையாடுறோம், எங்க அம்மாவோ தாத்தாவோ பாட்டியோ இல்ல. பேசுறதா இருந்தா எங்கள பத்தி மட்டு பேசு, என போற போக்கில் நிறைய விடயங்களை சொல்லிவிட்டு இல்லத்தில் க்ளாப்ஸ்களையும் விசில்களையும் அள்ளினார் ஜோவிகா.
இந்த விவாதத்தை எப்படி பார்ப்பது என்ற குழப்பம் அனைவருக்குமே இருக்கிறது. ஒரு சிலருக்கு விசித்ரா பேசியது சரியாக தோன்றும். இன்னும் சிலருக்கு ஜோவிகா பேசியது சரியென தோன்றும். அதற்கு காரணம் ஒன்றும் பெரிதாய் இல்லை. இருவரும் வெவ்வேறு தலைமுறைகள். அவ்வளவு தான். ’இங்கு விசித்ரா பேசியது சரியும் இல்லை. ஜோவிகா பேசியது தவறும் இல்லை. இது ஒரு இரண்டு தலைமுறையினருக்கு இடையேயான ஒரு முரண்பாடு அவ்வளவு தான்’ .
இறுதியாக விசித்ரா கூறிய ’அனைவருக்கும் அடிப்படை கல்வி அவசியம்’ என்பது ஏற்றுக் கொள்ள கூடியதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் இங்கு சிலருக்கு அவர்கள் செல்லும் பாதை பைபாஸ்சாக இருக்கும். செல்ல வேண்டிய இடத்தை அடைய கார் இருக்கும். வழி நெடுக வழிகாட்டியும் இருப்பர். அதனால் கல்வி அவர்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. ஆனால் கையில் ஒன்றுமே இல்லாதவனுக்கு என்ன இருக்கும் என்றால், அங்கு அவனுக்கு கல்வி மட்டுமே பைபாஸ் ஆகவும், பாதையாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருக்கும். அவ்வளவு தான்.
“ இன்றைய எபிசோடு முழுக்க ஜோவிகா வெர்சஸ் விசித்ரா என்றே முடிந்து விட்டது. பிக்பாஸ்சே எதிர்பார்த்து இருக்க மாட்டார். இவ்ளோண்டு டாஸ்க்ல இவ்ளோ பத்திக்கும்னு “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !