Bigg Boss Tamil 7 | Day 5 | ‘எல்லோரும் படிச்சு தான் பெரியாள் ஆகனும்னு இல்ல’
Bigg Boss Tamil 7 Day 4 Vichithra VS Jovika Idamporul
விசித்ரா படிப்பு என்ற விஷயத்தை பற்று பேசும் போது, ஜோவிகாவிற்கு விசித்ராவிற்கும் இடையே ஒரு வாக்குவாதம் உருவாகிறது.
’ஒரு அடிப்படையான கல்வி ஒவ்வொருவருக்கும் வேண்டும்’ என விசித்ரா சொல்வதும் சரி தான், ’எல்லோரும் படிச்சு தான் பெரியாள் ஆகனும்னு இல்ல’ என்ன ஜோவிகா சொல்வதும் சரி தான். ஆனால் இங்கு விசித்ரா சொன்ன விஷயத்திற்கு வராத கைதட்டல்கள், ஜோவிகா சொன்ன விஷயத்திற்கு மட்டும் வந்ததனால், ஜோவிகா சொன்னது மட்டுமே சரி என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது.
“ அடிப்படை கல்வி அனைவருக்கும் அவசியம், அதே சமயத்தில் இங்கு யாருக்கும் கல்வியை திணிக்கவும் முடியாது. அது அவரவர் உரிமை அவ்வளவு தான் “