Bigg Boss Tamil 7 | Day 50 | Review | ‘வரப்போகும் மூன்று அதிர்வுகள், தாங்குமா பிக்பாஸ் இல்லம்?’

Bigg Boss Tamil 7 Day 50 Pathikittu Veedu Idamporul

Bigg Boss Tamil 7 Day 50 Pathikittu Veedu Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: விஷ்ணு, கூல் கான்வர்சேஷன் – அர்ச்சனா, விசித்ரா கான்வர்சேஷன் – ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் செலக்சன் – பூர்ணிமாவின் மறுப்புகள் – மணி, மாயா கான்வர்சேஷன் – நாமினேசன் – பூகம்பம்

Bigg Boss Tamil 7 Day 50 Vishnu Cool Suresh Conversation Idamporul
Bigg Boss Tamil 7 Day 50 Vishnu Cool Suresh Conversation Idamporul


விஷ்ணு நார்மலாக பேசும் போதே பல உண்மைகளை போட்டு உடைத்து விடுவார். அந்த வகையில் அக்‌ஷயா, விக்ரம் அவர்களை அவர் பருத்தி மூட்டை என குறிப்பிட்டது நிச்சயம் சரி தான். இருவரும் எப்படி மிஸ் ஆகிறார்கள் என்ற கேள்வி ஆடியன்ஸ்சிற்குமே இருக்கிறது. இரண்டு வீடுகளாக பிரிந்தது யாருக்கு சாதகமோ இல்லையோ, இல்லத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும் மிக்ஸர் போட்டியாளர்களுக்கு சாதகமாகி விட்டது.

Bigg Boss Tamil 7 Day 50 Archana About Maya Poornima Nomination Discussion Idamporul
Bigg Boss Tamil 7 Day 50 Archana About Maya Poornima Nomination Discussion Idamporul


விதி மீறல் விதி மீறல்னு சொல்றாங்களே, நம்மள சொல்லும் போது வீக் எண்ட்ல கைதட்டுனாங்களே, மாயா, பூர்ணிமா, ஜோவிகா எல்லாம் ஏதோ கோடு வேர்டு வச்சு நாமினேசன் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்ததா தினேஷ் சொன்னதா, அர்ச்சனா விசித்ரா கிட்ட சொல்லிட்டு இருக்காங்க, தொடர்ந்து மாயா & கோ செய்யும் பல தவறுகளை கமல் அவர்கள் சுட்டிக் காட்டுவதில்லை. பார்க்கலாம் இந்த வாரம் ஆவது அதை நோட்டீஸ் செய்கிறாரா என்று!

Bigg Boss Tamil 7 Day 50 Dinesh SMHM Selection Idamporul
Bigg Boss Tamil 7 Day 50 Dinesh SMHM Selection Idamporul


வீட்டில் இருந்த 50 நாட்களும் ஏதும் செய்யவில்லை என்ற ஸ்டேட்மெண்ட்களின் கீழ் பூர்ணிமாவையும், விக்ரமையும், 50 நாட்களில் எல்லாமே பண்ணிட்டாங்க, இனிமே பண்றதுக்கு ஒன்னும் இல்ல என்பதின் கீழ், விஷ்ணு மற்றும் விசித்ராவையும், 50 நாட்களாகவே முகமூடி அணிந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதின் கீழ், ஜோவிகா மற்றும் பிராவோவை, தினேஷ் ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு தேர்ந்து எடுத்தார்.

Bigg Boss Tamil 7 Day 50 Poornima Not Accepting Dinesh Reason Idamporul
Bigg Boss Tamil 7 Day 50 Poornima Not Accepting Dinesh Reason Idamporul


நான் கேப்டனா இருக்கிறப்போ ஸ்ட்ரேட்டஜி பண்ணேன் ஒத்துக்கிறேன், அன்னிக்கு அத எல்லாரும் சேர்ந்து ரோஸ்ட் பண்ணாங்கள்ல வீக் எண்ட் எபிசோடுல, இன்னிக்கு இவரும் அது தானே பண்ணி இருக்காரு, நான் என்ன 50 நாளும் காஸிப்ஸ் தான் பண்ணிட்டு இருக்கிறேனா?, ஸ்ட்ரேட்டஜினா ஸ்ட்ரேட்டஜின்னு ஒத்துக்கிட்டு போகலாம் தானே, இதெல்லாம் யாரும் கேக்க மாட்டீங்க என பூர்ணிமா, தினேஷ் மீதான தனது ஆதங்கத்தை கோபத்துடன் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்.

Bigg Boss Tamil 7 Day 50 Mani Argument With Maya Poornima Idamporul
Bigg Boss Tamil 7 Day 50 Mani Argument With Maya Poornima Idamporul


மாயா, பூர்ணிமாவிற்கு மணி எல்லாம் நம்மள பத்தி வீக் எண்ட்ல பேசி கை தட்டு வாங்குறானேன்னு காண்டு, மெல்ல அவரை ட்ரிகர் பண்ணுவோமே என துவங்கிய உரையாடல் கடைசியில் அவர்களையே ட்ரிகர் ஆக்கியது. ’நீ சீப்பா ஒன்னு பண்ணுற அத நான் நேரடியாவே உன்கிட்ட சொல்லுவேன், உன்ன மாறி பின்னாடி சொல்ல மாட்டேன் மணி’ என மாயா சொன்னது தான். ‘நான் சீப்புன்னா, இருக்குறதுலயே கேவலமான சீப்பு, பெஸ்ட் சீப்பு, மோசமான சீப்பு நீ தான்’ என மாயாவின் மூஞ்சுக்கு நேராக மணி நின்று பார்த்து சொன்னதெல்லாம் அல்டிமேட். சிட்டிக்கு கோபம் வந்திருச்சு என்பது போல இருந்தது.

Bigg Boss Tamil 7 Day 50 Direct Nomination Power Idamporul
Bigg Boss Tamil 7 Day 50 Direct Nomination Power Idamporul

பிக்பாஸ் போட்டியாளர்கள்நாமினேசன்ஸ்
மணிபூர்ணிமா, பிராவோ
ரவீனாவிசித்ரா, ஜோவிகா
அர்ச்சனாபூர்ணிமா, ஜோவிகா
அக்‌ஷயாவிசித்ரா, பிராவோ
தினேஷ்பூர்ணிமா, விசித்ரா
மாயாவிஷ்ணு, பிராவோ
கூல் சுரேஷ்பிராவோ, விக்ரம்
நிக்ஸன்விசித்ரா, பூர்ணிமா
ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள்நாமினேசன்ஸ்
பூர்ணிமாமணி, ரவீனா
விஷ்ணுமாயா, அக்‌ஷயா
விக்ரம்மணி, அர்ச்சனா
ஜோவிகாநிக்ஸன், அர்ச்சனா
பிராவோஅர்ச்சனா, மணி
விசித்ராரவீனா, மணி

வாக்கெடுப்பிற்குள் செல்பவர்கள்: மணி (4), விசித்ரா (4), பூர்ணிமா (3), பிராவோ (3), அர்ச்சனா (3), ரவீனா (2), ஜோவிகா (2) இது போக டைரக்ட் நாமினேசன் மூலம் மாயா மற்றும் அக்‌ஷயா

விஷ்ணு அவர்கள் அவர் பெற்ற ஸ்டார்களின் பவர் மூலம், மாயா மற்றும் அக்‌ஷயாவை டைரக்ட் நாமினேசனுக்குள் இழுத்தார்.

Bigg Boss Tamil 7 Day 50 Shocking Task Idamporul
Bigg Boss Tamil 7 Day 50 Shocking Task Idamporul


50 நாட்களை கடந்து விட்டதால் வீட்டில் சமநிலையை சோதிப்பதற்காக, 3 பூகம்பங்கள் உள்ளே வர இருக்கிறதாம். அதாவது 3 எக்ஸ் போட்டியாளர்கள் உள்ளே வருவார்களாம். தற்போதைய போட்டியாளர்களையும், வெளியே சென்று உள்ளே வந்த எக்ஸ் போட்டியாளர்களையும் மையப்படுத்தி டாஸ்க்குகள் இருக்குமாம். டாஸ்க்கில் தோற்பவர்கள் இல்லத்தை விட்டு வெளியேற வேண்டுமாம். ஒருவேளை எக்ஸ் போட்டியாளர்கள் ஜெயிக்கும் பட்சத்தில் அவர்கள் உள்ளே இருப்பார்களாம், அவரிடம் தோற்றவர் வெளியே செல்ல வேண்டுமாம். எவிக்சனின் எண்ணிக்கை இந்த வாரம் மாறுபடும் என பிக்பாஸ் இல்லத்திற்குள் ஒரு மிகப்பெரிய பூகம்பத்தை விதைத்து இருக்கிறார்.

“ இந்த டாஸ்க்கின் மூலம் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் வெளியே சென்றவர்கள் உள்ளே இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தால் வீட்டின் சமநிலை உடைந்து வீடு பிளவுபடவும் வாய்ப்புகள் இருக்கிறது “

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author