Bigg Boss Tamil 7 | Day 58 | Review | ‘நிக்ஸன் கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கன்னி வெடியை வைக்கும் ஹவுஸ்மேட்ஸ்’

Bigg Boss Tamil 7 Day 58 Poornima Vishnu Maya Conversation Idamporul

Bigg Boss Tamil 7 Day 58 Poornima Vishnu Maya Conversation Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பத்து எட்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: விஷ்ணு VS அர்ச்சனா – விஷ்ணு பற்றி தினேஷ் – ஹவுஸ் க்ளீனிங் டாஸ்க் – பார்க்கிங் ட்ரெயிலர் – ப்ளீஸ் சார் – விஷ்ணு, பூர்ணிமா கான்வர்சேஷன் – விஷ்ணுவின் உரிமை மணி

Bigg Boss Tamil 7 Day 58 Vishnu VS Archana Argument Idamporul
Bigg Boss Tamil 7 Day 58 Vishnu VS Archana Argument Idamporul


விஷ்ணு வந்த முதல் நாளில் இருந்து இன்று வரை அவர் செய்த அனைத்து விவாதங்களிலும் ஏதாவது ஒரு கருத்து இருக்குமா என்றால் ஒன்றும் இருக்காது. அது தேவையான விவாதமாகவும் இருக்காது. இழுத்து பிடித்து செய்த விவாதமாக தான் இருக்கும். விவாதம் என்பது ஏதாவது தேவையுள்ள ஆணிகளுக்காக இருக்க வேண்டும். ஆனால் விஷ்ணு பிடுங்கியது அனைத்துமே ஒரு தேவையில்லாத ஆணிகள் தான். இன்னொன்று விவாதம் வைக்கும் போது விவாதத்தின் எதிர்முனையில் இருப்பவரை மொத்தமாக டவுன் செய்வது மட்டுமே அவரது விவாதமாக இருக்கும். அப்படி தான் நேற்றைய சப்பாத்தி பிரச்சினையிலும் அர்ச்சனாவிடம் விவாதத்தை மேற்கொண்டார் விஷ்ணு. நடுவுல வந்த நடுவுல போயிருவா பாப்போமோ, பாப்போமோ என அர்ச்சனாவுடன் அவர் மேற்கொண்ட விவாதத்தில் சிரிப்பு தான் வந்ததே தவிர யோசிக்கும் படியான எந்த கருத்துமே அதில் இல்லை.

Bigg Boss Tamil 7 Day 58 Dinesh About Vishnu Idamporul
Bigg Boss Tamil 7 Day 58 Dinesh About Vishnu Idamporul


விஷ்ணுவுமே இந்த வீட்டில் யார் யார் சாஃப்டாக விவாதம் மேற்கொள்வார்களோ அவர்களிடம் மட்டுமே விவாதத்திற்கு நிற்பார். அதுவே ஒரு பலமான போட்டியாளரிடம் அவரை விவாதம் வைக்க சொல்லுங்களேன், ரெண்டு வார்த்தை பேசி நகர்ந்து விடுவார். இல்லையேல் அவர்களிடம் விவாதத்திற்கே செல்ல மாட்டார் என தினேஷ் விஷ்ணு பற்றி கூறியது 100 சதவிகிதம் சரி என்றே சொல்லலாம்.

Bigg Boss Tamil 7 Day 58 Small Boss Team Won The House Cleaning Task Idamporul
Bigg Boss Tamil 7 Day 58 Small Boss Team Won The House Cleaning Task Idamporul


ஹவுஸ் கிளீனிங் டாஸ்க், இது ஒரு ஸ்மால் பாஸ் VS பிக்பாஸ் வீட்டார்களுக்கு இடையேயான டாஸ்க். இது ஒரு டைல்ஸ்களை உயரமாக அடுக்கும் டாஸ்க் போல தான், ஒருவர் டைல்களை அடுக்க வேண்டும், இன்னொருவர் தன் ஹவுஸ்மேட்ஸ் அடுக்குவதை எதிர் போட்டியாளர் கலைக்காமல் பாதுகாக்க வேண்டும் அல்லது எதிர் போட்டியாளர்களின் டைல்ஸ் கோபுரத்தை கலைக்க வேண்டும். டாஸ்க்கில் தோற்கும் வீட்டார்கள் வீடு, பாத்ரூம் என அனைத்தையும் க்ளீனிங் செய்யும் பொறுப்பில் ஈடுபட வேண்டும். ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து பூர்ணிமாவும், தினேஷ்சும் விளையாட முற்பட்டனர். பிக்பாஸ் இல்லத்தில் இருந்து தினேஷ் மற்றும் மணி விளையாட முற்பட்டனர். பூர்ணிமா வெகு விரைவாக டைல்ஸ்களை ஒரு உயரத்திற்கு அடுக்கிக் கொண்டு இருந்தார். விஷ்ணு அதை பாதுகாத்தார். இன்னொரு பக்கம் தினேஷ்சின் கோபுரம் சரிந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பூர்ணிமாவின் கோபுரம் பஸ்சர் அடிக்கும் வரை உயர்ந்து கொண்டே சென்றதால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் ஹவுஸ் க்ளீனிங் பொறுப்பில் இருந்து தப்பினர் ஸ்மால் பாஸ் இல்லத்தினர்.

Bigg Boss Tamil 7 Day 58 Parking Promotion Idamporul
Bigg Boss Tamil 7 Day 58 Parking Promotion Idamporul


நேற்றைய தினமே பார்க்கிங் திரைப்படத்தின் புரோமோசனுக்காக வந்து இருந்த ஹரீஸ் கல்யாண் வீட்டிலும் ஒரு நாள் தங்கி வீட்டாளர்களிடம் அன்பு பேசினார். அதற்கு பின்னர் ட்ரெயிலரை ஒளிபரப்பி விட்டு படத்தின் மையக்கருத்துக்களை விளக்கிக் கொண்டு இருந்தார். அவருக்கு பிக்பாஸ் மேடை பழக்கம் தான் என்றாலும் கூட, இதே மேடை அவருக்கு பியார் பிரேமா காதல் என்ற ஹிட்டை கொடுத்து இருந்தது. தற்போது பார்க்கிங் திரைப்படமும் கொடுக்கும் என நம்பலாம்.


Bigg Boss Tamil 7 Day 58 Please Sir Please Sir Idamporul
Bigg Boss Tamil 7 Day 58 Please Sir Please Sir Idamporul


ஹரீஸ் , அர்ச்சனா, பூர்ணிமா செய்த பிக்பாஸ் ஷாப்பிங்கில், அவர்கள் சமையலுக்கு முக்கியமான அரிசியை மறந்து விட்டார்கள், அதற்காக பிக்பாஸ்சிடம் கெஞ்சும் படி ‘ப்ளீஸ் சார், ப்ளீஸ் சார்’ என்ற பாடலை பாடி அதற்கேற்றார் போல அசைவுகளையும் மேற்கொண்ட பிக்பாஸ் இல்லத்தார்களின் அந்த நடனம் அழகாக இருந்தது.

Bigg Boss Tamil 7 Day 58 Poornima Vishnu Conversation Idamporul
Bigg Boss Tamil 7 Day 58 Poornima Vishnu Conversation Idamporul


ஓரு படம்னு எடுத்துக்கிட்டா அதுல ஹீரோ எவ்ளோ முக்கியமோ, அது போல தான் வில்லனும் ரொம்பவே முக்கியம், அங்க வில்லன் ஸ்ட்ராங்கா இல்லனா அந்த படமே பிளாப் ஆகிடும் என விஷ்ணு கூறியது சரி தான். இந்த பிக்பாஸ்சும் அது மாறி தான், மாயா, பூர்ணிமா, பிரதீப் போன்ற அசாத்திய வில்லன்கள் இருப்பதனால் மட்டுமே ஓரளவுக்கு தாக்கு பிடிக்கிறது. ஏதாவது ஒரு ஸ்டேஜில் அவர்கள் எவிக்ட் ஆகி இருந்தால் இந்த பிக்பாஸ் எப்போதோ படுத்து இருக்கும்.

Bigg Boss Tamil 7 Day 58 Vishnu Urimai Mani Idamporul
Bigg Boss Tamil 7 Day 58 Vishnu Urimai Mani Idamporul


அடுத்தகட்டமாக உரிமை மணியை கேப்டனுக்கு எதிராக திருப்பினார் விஷ்ணு, அவரது விவாதம் என்ன வென்றால், ‘சாப்பாட்டை எழுதி போட்டு மணி அடித்த பின்பே சாப்பாட்டுக்கான வேலைகளை செய்ய சொல்ல வேண்டும்’ ஆனால் முன்னதாகவே வெங்காயம் வெட்ட சொன்னார்கள் தக்காளி வெட்ட சொன்னார்கள், சொன்னதும் நிக்ஸன் தான், போர்டில் எழுதிப்போடாமல் எப்படி நீ வெட்டச்சொல்லலாம் என்பது விஷ்ணுவின் பிராது, போர்டில் எழுதிப்போடாமல் நீங்கள் எப்படி சமையலை ஆரம்பிக்கலாம் என்பது நிக்ஸ்னின் பதிலடி தாக்குதலாக இருந்தது. ஒரு வழியாக இல்லத்தார்கள் அனைவரும் நிக்ஸனுக்கு ஆதரவாக கரம் நீட்டியதால் இந்த பிராதும் செல்லாக் காசாகி போனது.

“ ஒட்டு மொத்தமாக நிக்ஸனை கவிழ்க்க தனித்தனியாக ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வியூகம் வகுத்தாலும் கூட நிக்ஸன் தரமாக பதிலடி கொடுத்து வருகிறார், இனியும் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author