Bigg Boss Tamil 7 | Day 6 | ‘அய்யய்யோ, இவங்களா முதல் எலிமினேசன்?’

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் எலிமினேட் ஆன முதல் போட்டியாளரின் பெயர் கசிந்து இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கத்தை விட பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. வீக் எண்ட் என்றாலே இரண்டு விஷயங்கள் இருக்கும், ஒன்று பஞ்சாயத்து, இன்னொன்று எலிமினேசன். முதல் வீக் எலிமினேசன் என்பது எப்போதுமே கொஞ்சம் ஷாக்கிங்காக தான் இருக்கும். அந்த வகையில் 17 ஆவது போட்டியாளர்களாக இல்லத்திற்குள் உள்ளே நுழைந்த அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.

“ ஓரளவிற்கு நிச்சயம் டஃப் ஆன போட்டியாளராக தான் தெரிந்தவர். முதல் வாரத்திலேயே எலிமினேசன் அளவிற்கு செல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் முதல் வீக் எலிமினேசன் கொஞ்சம் எதிர்பார்க்க முடியாததாக தான் இருக்கும். பார்க்கலாம் “

About Author