Bigg Boss Tamil 7 | Day 60 | Review | ‘தொடர்ந்து அர்ச்சனாவை டார்கெட் செய்கிறாரா விஷ்ணு?’

Bigg Boss Tamil 7 Day 60 Vishnu VS Archana Idamporul

Bigg Boss Tamil 7 Day 60 Vishnu VS Archana Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், அறுபதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: நிக்ஸன் VS மாயா – பூர்ணிமா, விஷ்ணு கான்வர்சேஷன் – மார்னிங் ஆக்டிவிட்டி டாஸ்க் – மாயாவின் உரிமை மணி – ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க் – கட்டப்பட்ட போட்டியாளர்கள் – விஷ்ணு VS அர்ச்சனா

Bigg Boss Tamil 7 Day 60 Nixen Maya Argument Idamporul
Bigg Boss Tamil 7 Day 60 Nixen Maya Argument Idamporul


கூல் சுரேஷ்ச யாரும் கேக்குறதுல்ல, கேக்குறதுல்லன்னு மாயா நிக்ஸன ஏத்தி விட, அந்த பக்கம் கூல் சுரேஷ், ஜோவிகாலாம் தூங்குறாங்க அதெல்லாம் யாரும் கேக்க மாட்றாங்க என ஒரு பாயிண்டை போட்டு விட்டு நிக்ஸனை ஏத்தி விட கடைசியில் பிரச்சினை நிக்ஸன் வெர்சஸ் மாயாவில் வந்து முடிந்தது. மாயா அந்த சண்டையிலும் கூட நிக்ஸனை ஏத்தி விடுவது போல தான் இருந்தது. உனக்கு பயம், நீ என்ன கோழையா இங்க வந்து புலம்புற போன்ற வார்த்தைகள் எல்லாம் நிக்ஸனை தாக்கும் படியாக தான் இருந்தது. இப்படி பேசினால் அவர் கூல் சுரேஷ்சிடம் சென்று கோபத்தைக் காட்டுவார் நிக்ஸனின் பிம்பம் உடையும் என்று நினைத்து மாயா பண்ண ஒரு ஸ்ட்ரேட்டஜியாக தான் இது கண்ணுக்கு தெரிகிறது.

Bigg Boss Tamil 7 Day 60 Poornima Vishnu Conversation Idamporul
Bigg Boss Tamil 7 Day 60 Poornima Vishnu Conversation Idamporul


‘நான் அவர்ட்ட ஒரு விஷயத்த சொன்னேன், அத பப்ளிக்கா போட்டு உடைக்க கூடாதுன்னும் சொல்லி வச்சிருந்தேன், ஆனா விஷ்ணு வேணும்னே அத செஞ்சாரு, எனக்கு அவரு மேல ட்ரஸ்ட் Issue இருக்கு’ என பூர்ணிமா விஜய் அவர்களிடம் புலம்ப, அதை விஷ்ணு கேட்டுக் கொண்டே இருந்திருப்பார் போல. பூர்ணிமா உள்ளே வந்ததும் ‘இனிமேல் நாம பேசிக்க வேண்டாம்’ என்ற ஒரே வார்த்தையில், பூர்ணிமாவுக்கு இடையிலான உறவை முறித்துக் கொள்வதாக அவரிடமே அறிவித்தார் விஷ்ணு.

Bigg Boss Tamil 7 Day 60 Morning Activity Task Idamporul
Bigg Boss Tamil 7 Day 60 Morning Activity Task Idamporul


நீங்கள் இந்த வீட்டில் யாராக இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்பது கேள்வி, அர்ச்சனா பூர்ணிமாவாக இருக்க ஆசைப்படுவதாகவும், விக்ரம் அர்ச்சனாவாகவும், ரவீனா, மாயாவாகவும் இருக்க ஆசைபடுவதாக கூறி அவர்கள் சொன்ன காரணமும் கவனத்தை ஈர்த்தது. முக்கியமாக அர்ச்சனா, பூர்ணிமா குறித்து சொன்ன அத்துனையும் உண்மை, பூர்ணிமா ஒரு நல்ல அறிவுள்ள பட்சி தான், ஆனாலும் அவருடைய கேமை டைவர்ட் செய்து அவருக்கு இப்படி ஒரு பெயரையும் களங்கத்தையும் வாங்கி கொடுத்த முழு பொறுப்பையும் மாயா தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Bigg Boss Tamil 7 Day 60 Maya Bells Ring Against Nixen Idamporul
Bigg Boss Tamil 7 Day 60 Maya Bells Ring Against Nixen Idamporul


ஸ்மால் பாஸ் வீட்டாரான கூல் சுரேஷ், பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்து எக்சர்சைஸ் செய்தார், அது ஒரு விதி மீறல் அதை நிக்ஸன் பார்த்தும் கூட ஏதும் கேட்கவில்லை என்பது மாயாவின் பிராது. இது சரியான பிராது தான் என்றாலும் கூட, ஹவுஸ்மேட்ஸ் நிக்ஸனின் விளக்கத்திற்கு உடன்பட்டதால் நிக்ஸன் மீதான இந்த பிராதும், செல்லா பிராதாகி போனது.

Bigg Boss Tamil 7 Day 60 Shopping Repayment Task Idamporul
Bigg Boss Tamil 7 Day 60 Shopping Repayment Task Idamporul


அடுக்கப்பட்ட பிரிக்குகளை, தலை ஹெல்மெட்டில் கட்டப்பட்டுள்ள பாலை கொண்டு அடிக்க வேண்டும். அனைத்து பிரிக்குகளையும் அடித்து நகர்த்த வேண்டும், 14 பேரும் விளையாட வேண்டும், 10 பேர் ஜெயித்தால் டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் ஜெயித்த்தாக கொள்ளப்படும். விறுவிறுப்பாக நடைபெற்ற டாஸ்க்கில் அர்ச்சனா ஜெயித்து, விஷ்ணு தோற்றது தான் ஹைலைட். ஆனாலும் ஹவுஸ்மேட்ஸ் டாஸ்க்கில் தோற்றனர். டாஸ்க்கில் தோற்றதால் 3 ஜோடிகளின் கைகள் கயிறு கொண்டு கட்டப்படும், அவர்களுக்கு அதை அவிழ்க்க உரிமை இல்லை. அப்படி அவிழ்த்தால் இரண்டு மூன்றாகலாம் என்பது அறிவிப்பு.

Bigg Boss Tamil 7 Day 60 Contestant Tied Idamporul
Bigg Boss Tamil 7 Day 60 Contestant Tied Idamporul


விசித்ரா – கூல் சுரேஷ், மாயா – மணி, விஷ்ணு – அர்ச்சனா ஆகிய ஜோடிகளின் கைகள் கட்டப்பட்டு அவர்கள் விதிகளுக்குள் கொண்டு வரப்பட்டனர். இதில் அர்ச்சனா, மாயா கயிறு கட்டை அவிழ்க்கவே அவர்களுடன் கட்டப்படும் போட்டியாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. மாயா – மணியுடன் தினேஷ் இணைக்கப்பட்டார், அர்ச்சன, விஷ்ணுவுடன், பூர்ணிமா இணைக்கப்பட்டனர்.

Bigg Boss Tamil 7 Day 60 Vishnu Archana Argument Idamporul
Bigg Boss Tamil 7 Day 60 Vishnu Archana Argument Idamporul


விஷ்ணு வழக்கம் போல மீண்டும் தன்னுடைய கலக வேலையை அர்ச்சனாவிடம் தொடர்ந்தார். அவரை பொறுத்தவரை தனக்கு எதிரில் இருப்பவர்களை கேவலமாக சித்தரித்து தான் அதில் சரியாக தெரிய வேண்டும். தொடர்ந்து நொய் நொய் என்று கத்திக் கொண்டே இருந்ததால் ஒரு சமயத்தில் கயிறை அவிழ்த்து விட்டு நடையைக் கட்டினார் அர்ச்சனா.

“ ஒருவரால் தன்னுடைய மெண்டல் ஹெல்த்திற்கு பாதிப்பு இருக்கிறது என்றால் அவரிடமிருந்து விலகுவதில் தவறே இல்லை, அர்ச்சனா செய்தது சரி தான், ஆனால் அது எவ்வாறு சித்தரிக்கப்பட இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author