Bigg Boss Tamil 7 | Day 61 | Review | ‘என் அனுமதி இல்லாம என்ன தொட உங்களுக்கு உரிமை இல்ல!’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், அறுபத்து ஒன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: விதிமீறல்கள் – நிக்ஸனின் சமாதானப்படுத்தும் முனைவு – தினேஷ் VS மாயா – கேப்டன்ஸி டாஸ்க்கிற்கான போட்டியாளர்கள் தேர்வு – ஜோவிகாவின் அழுகை – கேப்டன் கட்டப்படுதல் – விக்ரம், அனன்யா கான்வர்சேஷன்
கயிறுகளால் கட்டப்பட்டவர்கள் தொடர்ந்து பிக்பாஸ் இல்லத்தின் விதிகளை மீறி தன்னை சுதந்திரப்படுத்திக் கொண்ட காரணத்தால், வீட்டின் கியாஸ் மற்றும் மைக்ரோ ஓவன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முக்கியமாக மாயா – தினேஷ் – மணி கூட்டணியின் மாயாவின் வீம்புகளாலும், அர்ச்சனா – விஷ்ணு – பூர்ணிமா கூட்டணியில் விஷ்ணுவின் வீம்புகளாலுமே இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. யாரும் அவர்களாக சமாதானம் ஆகுவதாக தெரியவில்லை. தொடர்ந்து துண்டிப்புகள் நீண்டு கொண்டே போனது.
கேப்டன் நிக்ஸன் சமாதானக்களத்தில் இறங்கினார், முதலில் அர்ச்சனாவுடன் சென்று சமாதான தூது பேசிய போது, அவர் இரண்டு கோரிக்கைகள் வைத்தார், ஒன்று விஷ்ணு மன்னிப்பு கேட்க வேண்டும், இன்னொன்று விஷ்ணு வாயை மூடிக் கொண்டு எதுவும் பேசாமல் இருக்க வேண்டும் இவ்வாறு செய்தால் நான் கயிறுகளை கட்டிக் கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் விஷ்ணு அதை ஏற்றுக் கொள்ளவில்லை, பட்டினியா கூட கிடங்க நான் சாரி எல்லாம் கேட்க மாட்டேன் என கறாராக கூறினார்.
சரி இவங்கள விடுவோம், மாயா – தினேஷ் – மணி கூட்டணியை முதலில் கட்டி விடுவோம் என அங்கு சென்றால், அங்கு தினேஷ்சும், மாயாவும் வீம்பு பிடித்துக் கொண்டு இருந்தனர். இவ்ளோண்டு கயிறை டைட் செய்ததற்கு, ’என்ன தொட உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தது, என் அனுமதி இல்லாம ஏன் என்ன தொடுறீங்க’ என மாயா அடுத்த பெண்கள் பாதுகாப்பு கன்டன்ட்டை வேண்டுமென்றே தினேஷ்சுக்கு எதிராக உருவாக்கி கொண்டு இருந்தது போல இருந்தது. ஒரு கட்டத்திற்கு பின்னர் இரு அணிகளையும் சமாதானம் செய்து கயிறுகளை கட்ட வைத்த பின் வீட்டின் கியாஸ் மற்றும் இதர சேவைகள் ஆன் செய்யப்பட்டது.
அடுத்த கட்டமாக கேப்டன்சி டாஸ்க்கிற்கான போட்டியாளர்கள் தேர்வு, கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்டு இருக்கும் ஒரு குட்டி மேடையில் ஒவ்வொருவரும் ஏறி நிற்க வேண்டும், ஒவ்வொருவருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் இருந்து வரும் ஆதரவைப் பொறுத்து 3 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில் அதிக ஆதரவு பெற்ற கூல் சுரேஷ், விஷ்ணு, அர்ச்சனா உள்ளிட்டோர் கேப்டன்சி டாஸ்க்கிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கேப்டன்சி டாஸ்க்கிற்கான போட்டியாளர்கள் தேர்வின் போது, விஷ்ணுவை தேர்ந்தெடுத்ததில் ஒரு சில முரண்பாடுகள் இருந்தது. ஒரு குறிப்பிட்ட கேங்குகள் மட்டுமே விஷ்ணுவை ஆதரித்ததால், தினேஷ், ரவீனா, மணி உள்ளிட்டோர் கேங், கேங் என்று காமெடியாக ஒரு சில செயல்களை செய்தனர். அந்த கேங்கில் ஜோவிகாவும் இருந்ததால், அவர் கொந்தளித்து ‘சிங்கம் ஆல்வேஸ் சிங்கிள்’ என்பதை நிரூபிக்க முயன்ற முனைப்பில் அழுது தீர்த்து விட்டார். இப்ப நான் 2 வாரமான தனியா தான் இருக்கேன், அப்படியும் என்ன கேங் கேங்னு சொல்லிட்டே இருக்கீங்க, நீங்க சொல்றதுனால தான் என்ன வெளில தப்பா நினைக்கிறாங்க என புலம்பி தீர்த்துக் கொண்டு இருந்தார். ஆனால் அது உண்மை இல்லை, ஒரு இரண்டு வாரம் நீங்கள் கேங்காக சேர்ந்து செய்த அட்டூழியங்கள், உங்களை பின் தொடர்கிறது என்பது தான் உண்மை, மக்கள் அவ்வளவு எளிதில் எதையும் மறக்க மாட்டார்கள் ஜோவிகா.
தொடர்ந்து இல்லத்தில் விதிகள் மீறப்பட்டதாலும், கூல் சுரேஷ் – விசித்ரா கூட்டணி அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் கயிறுகளை அவிழ்த்ததாலும், கூல், விசித்ரா கூட்டணியில் மூன்றாவதாக கேப்டன் நிக்ஸனையும் இணைத்து விட்டார் பிக்பாஸ். இந்த டாஸ்க் பெரிதாக எந்த சுவாரஸ்யமும் தரவில்லை. மாறாக நிக்ஸனுக்கும், பார்க்கும் ஆடியன்ஸ்களுக்கும் தான் இது பெரிய தலைவலியை தந்தது.
விக்ரம் ஒருமுறை கேமரா முன்பு நின்று, ‘பிக்பாஸ் டைட்டில் வின்னர் சரவண விக்ரம்’ என பேசி இருப்பார். அதை வெளியில் இருந்து வந்த விஜய், அனைவரிடம் கூற, கூல் சுரேஷ், விஷ்ணு உள்ளிட்டோர் அவரை மாக் செய்யும் விதமாக பேசிக் கொண்டு இருந்தனர். சரி அது அவரது பெர்சனல் கான்பிடன்ஸ்சாக இருக்கலாம், ஆனால் அதற்காக அவரை கேவலமான முறையில் மாக் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்தது. அவர் இந்த வீட்டில் யாரையும் புட் டவுன் செய்யாமல், எந்த ஒரு ஸ்ட்ரேட்டஜிக்குள்ளும் விழாமல் அவர் அவரை மேன்மையாக தான் காண்பித்துக் கொண்டு இருக்கிறார் என்பது விஷ்ணு போன்றோருக்கு புரிய வாய்ப்பில்லை.
“ இந்த வீட்டில் தற்போதைய சூழலில் யாருமே நேர்மையாக விளையாட இயலாது, அத்தகைய சூழலை ஏற்கனவே விதைத்து விட்டனர், பார்க்கலாம் அடுத்தடுத்த கட்டங்கள் எப்படி நகரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !