Bigg Boss Tamil 7 | Day 64 | Review | ‘விஷ்ணுவை சீண்டும் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் அறுபத்து நான்காம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: ஸ்ட்ரைக் ரூல்ஸ் – ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் செலக்சன்ஸ் – சைக்கிள் இண்டர்லிங்டு – நாமினேசன் – வீட்டு பணி டாஸ்க் – விஷ்ணு வெர்சஸ் பூர்ணிமா
ஸ்ட்ரைக் கொடுப்பதற்கு இந்த முறை மூன்று ரூல்கள் வகுக்கப்பட்டு இருந்தது. யாரேனும் கேப்டனை மீறியும், கேப்டன் முன்னாலும் ரூல் பிரேக் செய்தால் ஸ்ட்ரைக் கொடுக்கலாம், பயாஸ்டாக இருப்பதாக தெரிந்தால் ஸ்ட்ரைக் கொடுக்கலாம், வீட்டில் பொழுது போக்கை மெயிண்டன் செய்ய தவறினால் கேப்டனுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கலாம். மூன்று ஸ்ட்ரைக்குகள் கொடுக்கப்பட்டு ஹவுஸ்மேட்ஸ்சும் அதை ஏற்கும் பட்சத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அடுத்த வார டைரக்ட் நாமினேசனுக்குள் செல்ல நேரிடும்.
எனக்கு பிடிக்காத இரண்டு நபர்கள் – விஜய் மற்றும் அனன்யா, மக்களுக்கு பிடிக்காத இரண்டு நபர்கள் – நிக்ஸன் மற்றும் பூர்ணிமா, பெரும்பான்மையான ஹவுஸ்மேட்ஸ்சுக்கு பிடிக்காத இரண்டு நபர்கள் – ரவீனா மற்றும் விக்ரம் விஷ்ணுவின் தைரியமான இந்த ஸ்ட்ரேட்டஜி பாராட்டுக்குரியது, ஆனாலும் மனதில் பட்டதை கூறிவிட்டு பூர்ணிமாவிடம் மறுபடியும் சென்று சாரி கேட்டதில் அவரது தைரியம் உடைபட்டது. பூர்ணிமா ஏதோ தன்னை விஷ்ணு யூஸ் பண்ணிகிட்டார், யூஸ் பண்ணிகிட்டார்னு பொலம்பிக்கிட்டு இருந்தாங்க, ரியாலிட்டி இஸ் நீங்களும் மாயாவும் அவர யூஸ் பண்ண நினைச்சீங்க, ஆனா அவர் உஷார் ஆகிட்டார், அது தான் உண்மை.
இனிமே வீட்டில் கேஸ் ஆன் பண்ண வேண்டும் என்றாலே வீட்டில் யாராவது இருவர் சைக்கிளிங் பண்ண வேண்டும், அதுவும் சமையல் துவங்கியது முதல் முடியும் வரை மாற்றி மாற்றி சைக்கிளிங் பண்ண வேண்டும், அந்த வகையில் தினேஷ், கூல் சுரேஷ் இருவரும் இணைந்து முதல் கட்டமாக சைக்கிளிங் செய்தனர். ஒரு கட்டத்திற்கு பின்னர் ஸ்வாஃப்பிங் ஆப்சன் மூலம் கூல் சுரேஷ் அவர்களை ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருக்கும் ரவீனா ஸ்வாஃப் செய்தார்.
பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் | நாமினேசன்ஸ் |
விசித்ரா | விஜய், பூர்ணிமா |
மாயா | அனன்யா, ரவீனா |
மணி | அனன்யா, நிக்ஸன் |
தினேஷ் | விக்ரம், நிக்ஸன் |
கூல் சுரேஷ் | விக்ரம், நிக்ஸன் |
அர்ச்சனா | பூர்ணிமா, நிக்ஸன் |
விஷ்ணு | விஜய், நிக்ஸன் |
ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் | நாமினேசன்ஸ் |
அனன்யா | தினேஷ், மணி |
நிக்ஸன் | அர்ச்சனா, மணி |
விஜய் | மணி, தினேஷ் |
பூர்ணிமா | தினேஷ், மணி |
விக்ரம் | அர்ச்சனா, விசித்ரா |
ரவீனா | மாயா, விசித்ரா |
ஒட்டு மொத்தமாக நாமினேட் செய்யப்பட்டவர்கள்: நிக்ஸன் (5), மணி (4), தினேஷ் (3), அர்ச்சனா (2), விசித்ரா (2)
இது ஒரு வீட்டு பணி டாஸ்க், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மூன்று பேர் விளையாட வேண்டும், இது ஒரு ஸ்டார்ட் டு எண்ட் மேஸ் டாஸ்க், ஆனால் ஒரு பெண்டுலத்தில் இருக்கும் ஸ்கெட்ச் மூலம் மூன்று பேரும் கயிரை பயன்படுத்தி விளையாட வேண்டும். ஸ்மால் பாஸ் மேட்ஸ் நிக்ஸன், ரவீனா, விக்ரம் சிறப்பாக விளையாடி ஸ்டார்ட் டு எண்டை வெகுவிரைவில் முடித்ததால், வீட்டு பணி பிக்பாஸ் மேட்ஸ் தலையில் விழுந்தது.
விஷ்ணு கேப்டன் ஆனதில் இருந்தே, பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்குமான உறவில் விரிசல் துவங்கி விட்டது. விஷ்ணுவின் அதிரடி நடவடிக்கைகள் கண்டு மாயாவும், பூர்ணிமாவும் உடைந்து நொறுங்கி போய் கிடக்கின்றனர். விஷ்ணு தான் எடுக்கும் நடவடிக்கைகள் சரி என்று உணர வேண்டும் சும்மா சும்மா நடவடிக்கைகள் எடுத்து விட்டு அதற்கு பின்னர் சாரி கேட்பது என்பதில் நியாயமில்லை. கேப்டனாக தொடர்ந்து ஸ்ட்ராங்காக செயல்பட வேண்டும். பார்க்கலாம்.
“ விஷ்ணுவின் கேப்டன்சியில் அதிரடி இருக்கிறது, ஆனால் கொஞ்சம் பயம் தெரிகிறது அவரிடத்தில், அந்த பயத்தை நீக்கி கொண்டு அதிரடி காட்டினால் பெஸ்ட் கேப்டனாக தெரிவார் என்பதில் ஐயமில்லை “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !