Bigg Boss Tamil 7 | Day 7 | Review | ‘இல்லத்தில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார் அனன்யா ராவ்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஏழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: கல்வியை பற்றி கமல் – விஜய்யின் தலைமை குறித்து இல்லத்தார்கள் – ஸ்ட்ரைக் கார்டு – ஸ்ட்ரைக் கார்டு குறித்து மாயா மற்றும் பூர்ணிமா – ஏன் விஜய்க்கு ஸ்ட்ரைக் கார்டு – அட்வைஸ் டு பிரதீப் – மேக் அப் மேட்டர் – எவிக்சன் பிராசஸ் – புத்தக பரிந்துரை – ஸ்மால் பாஸ் இல்லத்தார்கள் செலக்சன்
நேற்று கல்வி குறித்து சொல்ல மறந்த ஒரு சில கருத்துக்களை கமல்ஹாசன் இன்று பகிர்ந்து கொண்டார். யார கேட்டாலும் ‘காமராஜர் என்ன படிக்கவா செஞ்சாரு, முதலமைச்சர் ஆகலயா’ன்னு சொல்லுறாங்க, ஆனா அவர் முதலமைச்சர் ஆகிட்டு எளிய மக்களும் படிக்கட்டுமேன்னு பள்ளிக்கூடங்கள திறந்து, மதிய உணவுத்திட்டம்னு ஒன்ன ஆரம்பிச்சு எளிய மக்களை கல்வி நோக்கி தான் இழுத்தார். இன்று அரசுப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டமும் நமது அரசு ஆரம்பித்து இருக்கிறது, என கூறி கல்வியின் அத்தியாவசியத்தை உணர்த்தியதோடு இன்றைய எபிசோடு துவங்கியது.
அடுத்தகட்டமாக இல்லத்தார்களிடையே, விஜய் அவர்களின் கேப்டன்சி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அனைவரும் ஒருமித்த கருத்தாக விஜய் நன்றாகவே தலைமைப்பண்பை கையாண்டார் என முடித்து விட்டனர். பிரதீப், ’வாங்கிய ரேசன் பொருட்களை மேன்மையாக கையாண்டு இருக்கலாம். பழங்கள் ஒரு சில அழுகி விட்டது, இல்லத்தை மேம்படுத்த பேச கொடுத்த நேரங்களை விஜய் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம்’ என கூறினார். பூர்ணிமா விஜய்யின் அந்த அதீத கோப வெளிப்பாட்டை மட்டும் சுட்டிக் காட்டினார். அவ்வளவு தான்.
பிரதீப் ஷூவோடு இடித்த விவகாரத்தை விஜய் கொஞ்சம் பெரிதாக்கி, அவரது ஹீரோயிசத்தையும் கொஞ்சம் காட்டி, ’இப்படியே பண்ணா மூக்க உடைச்சிருவேன், வாய ஒடைச்சிருவேன், எனக்கு வெளிலையும் ஆள் இருக்காங்க. பார்த்துக்கோங்க’, என வன்முறை கலந்த வார்த்தைகளை பிரதீப்பிடம் கூறிய காரணத்தால், விஜய் வர்மா அவர்களுக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் முதல் ஸ்ட்ரைக் கார்டை கொடுத்தார் கமல்.
விஜய் அவர்களுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தது, மாயா மற்றும் பூர்ணிமா மனதில் கொஞ்சம் சல சலப்பை ஏற்படுத்தி இருக்கும் போல. அவர்கள் இருவரும் இணைந்து அப்படி ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டுமானால் முதலில் பிரதீப் மற்றும் விசித்ரா அவர்களுக்கு அல்லவா முதலில் கொடுத்து இருக்க வேண்டும் அவர்களும் வன்முறை வார்த்தைகளை பேசி இருக்கிறார்கள், என கமல் அவர்களின் மேடையில் விவாதித்தனர்.
மாயா, பூர்ணிமாவின் எதிர் விவாத கருத்துக்கள் குறித்து கமல் ஹாசன் கூறும் போது, இந்த ஸ்ட்ரைக் எல்லாருக்குமான ஒரு எச்சரிக்கை மட்டுமே. ஆனால் விஜய் வர்மா அந்த ஒரு தவறு மட்டும் பண்ணிடவில்லை. ஒருவரின் சோகத்தை நகைத்தார். அது மன்னிக்க முடியாத குற்றம். அவருடன் இன்னும் இரண்டு பேர் கூட சிரித்தார்கள். அவர்களுக்கும் சேர்த்து தான் இந்த ஸ்ட்ரைக் கார்ட்டை கொடுத்து இருக்க வேண்டும் என ஒரு வித கோபத்தின் பாணியில் கூறினார்.
’இது போக இன்னும் இரண்டு கார்டு விஜய் வாங்கி விட்டால் பேசாமல் இங்கு மேடைக்கு வந்து விட்டு என்னுடன் பேசிவிட்டு அப்படியே வீட்டுக்கும் சென்று விடலாம்’. கடவுள் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்பவர்களுக்கும் இதே கதி தான் என கூறி பவாவுக்கும் சைடு கேப்பில் ஒரு கொட்டு வைத்தார். அது போக வன்முறையான வார்த்தையான ‘எல்லாரையும் சாவடிப்பேன்’ என அடிக்கடி கூறும் பிரதீப்பிடமும் அதை தவிர்க்க சொல்லி கமல் கேட்டுக்கொண்டார்.
அடுத்ததாக ’மேக்கப்பை ஸ்ட்ரேட்டஜியாக வைத்து விளையாடுவோமே’ என கூறிய பிரதீப் பற்றி விவாதிக்கப்பட்டது. மேக்கப் என்பது ஒரு கலை. இங்கு அழகு என்பது தான் நாம். கண்ணாடி இல்லாமலும் கூட நாம் அழகு, என்று நாம் தீர்மானித்து விட்டால் அது அழகு தான். அவர் சொன்னார் என்பதற்காக நீங்கள் மேக்கப்பை அழித்தது தான் தவறு. ஜோவிகா போல நான் இப்படி தான் இருப்பேன் என நீங்களும் தவிர்த்திருக்க வேண்டும் என கமல் கூறினார்.
அடுத்ததாக கமல்ஹாசன் அவர்களின் புத்தக பரிந்துரை, முதல் வாரம் பவா அவர்கள் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர ரகசியங்கள் என்ற புத்தகத்தை பரிந்துரை செய்து இருந்தார். இந்த வாரம் கமல் அவர்கள் ராமச்சந்திர குஹா எழுதிய ‘India After Gandhi’ என்ற புத்தகத்தை பரிந்துரை செய்து இருந்தார். சிதம்பர ரகசியங்கள் எப்படி ஒரு இம்பேக்ட் கொடுத்ததோ அப்படியே இந்த புத்தகமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என கமல்ஹாசன் கூறி இருந்தார்.
புத்தகத்தை வாசிக்க நினைப்பவர்கள் இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்:
அடுத்ததாக எவிக்சன் பிராசஸ், வழக்கம் போல ‘யார் எவிக்ட் ஆவாங்கன்னு நினைக்கிறீங்க’ என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. பெரும்பாலும் பவா அவர்களை தான் அனைவரும் சொன்னார்கள். மாயா மற்றும் பூர்ணிமா ஜோடிகள் மட்டும் பிரதீப் என்று கூறினர். பின்னர் சிறிது நேரத்தில், அந்த ஜோடி புறாக்கள் பல்பு வாங்கினார்கள் அது வேறு விஷயம். ஆனால் ஒட்டு மொத்தமாக எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸ்சின் தத்துவத்திற்கேற்ப ஸ்மால் பாக்ஸ் இல்லத்தில் இருந்த அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார்.
ஆனால் அவர் வெளியேறி இருப்பது டாட்டூ விஷயத்தினால் அல்ல, பிக்பாஸ் இல்லத்திற்குள் நிலவிய கடுமையான போட்டியினால் என்பதை அனன்யாவிற்கு புரியவைத்து விட்டு, அவரது பயண வீடியோக்களையும் போட்டு காண்பித்து விட்டு, அனன்யாவை வழியனுப்பி வைத்தார் கமல் ஹாசன்.
அடுத்ததாக, ஸ்மால் பாஸ் இல்லத்துக்கு கேப்டன் சரவணன் போட்டியாளர்களை தேர்ந்து எடுக்கனும். ஆனா தேர்வு செய்வதற்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க் மாறி வச்சிட்டாரு. அதாவது ஒரு வார்த்தையை பிக்பாஸ் சொல்லுவாரு, அந்த வார்த்தைக்கு தகுந்தவரை 10 வினாடில சரவணன் சொல்லனும். அப்படி 10 வினாடில பேர் சொல்லாம இருக்குற பட்சத்துல, அந்த வார்த்தைக்கானவரையும் தேர்ந்து எடுக்கனும், இன்னொருத்தர வேற ஏதாச்சு ரீசன் சொல்லி தேர்ந்து எடுக்கனும். அவ்வளவு தான் டாஸ்க். அப்படிப் பார்த்தா 6 பேர் இல்ல, ஆறு பேருக்கும் அதிகமா ஸ்மால் பாக்ஸ் இல்லத்துக்குள்ள போக வாய்ப்பு இருக்கு.
மொத்தமா ஆறு வார்த்தைகள், 5 வார்த்தைகளுக்கு பொருத்தமானவங்கள, சரியா 10 வினாடிக்குள்ள சரவணன் சொல்லிட்டாரு, ஆறாவது கொஞ்சம் சொல்ல தவற, அதுனால இன்னொரு போட்டியாளரும் உள்ள போக வேண்டியதாச்சு. மொத்தம் 7 பேர் இந்த வாரம் ஸ்மால் பாஸ் இல்லத்துக்குள்ள போறாங்க. அது யாரெல்லாம்னா,
சோம்பேறி – பவா, தொட்டா சிணுங்கி – கூல் சுரேஷ், சுவாரஸ்யம் இல்லாதவர் – விஜய், அறுவை – மாயா, சோர்வானவர் – விஷ்ணு, சுயபுத்தி இல்லாவதவர் – ஐஸ்ஷூ இது போக அடிஷனலாக இவர் இல்லத்திற்குள் இருந்தால் எங்கள் டாஸ்க் பாதிக்கும் என்ற காரணத்தை கூறி பிரதீப்பும்!
“ அத்தோடு எபிசோடும் முடிந்தது. பேச வேண்டிய பஞ்சாயத்துகளை எல்லாம் சிறப்பாகவே பேசி முடித்தார் கமல், நடக்கும் சீன்களை எல்லாம் பார்க்கும் போது இந்த சீசன் இல்லத்தார்களுக்கு மட்டும் அல்ல, நிச்சயம் கமல் அவர்களுக்கும் எளிதாக இருக்காது என்பதே தோன்றுகிறது “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !