Bigg Boss Tamil 7 | Day 8 | Review | ‘முரண்பாடுகளால் சூடு பிடிக்கும் பிக்பாஸ் இல்லம்’

Bigg Boss Tamil 7 Day 8 Review In Tamil Idamporul

Bigg Boss Tamil 7 Day 8 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், எட்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: பிரதீப், மாயா, விஜய் விவாதம் – மாயா ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு போக மறுத்தல் – பவா இல்லம் விட்டு வெளியேறுதல் – விஷ்ணு VS சரவணன் – மாயா At Confession ரூம் – விஷ்ணு Argument – ரேசன் – நாமினேசன் – அழுவல் தேங்காயும் கூல் சுரேஷ்சும் – அரெஸ்ட் வாரண்ட் – அக்‌ஷயா Crying

Bigg Boss Tamil 7 Day 8 Pradeep Vijay Maya Aruguement Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Pradeep Vijay Maya Aruguement Idamporul

இன்றைய எபிசோடு, பிரதீப், மாயா, விஜய் அவர்களின் விவாதத்தில் இருந்து துவங்குகிறது. மாயா ஏதோ பிரதீப்பின் அம்மாவை பற்றி விமர்சித்ததாக பிரதீப் கூறுகிறார். இத்துனை நாள் தூங்காமல் இருந்ததன் விளைவா என்னவோ தெரியவில்லை. பிரதீப் சில விடயங்களை யோசிக்காமல் முன்வைத்து விட்டு பின்னர் அதில் இருந்து பின்வாங்குகிறார். இந்த விமர்சனம் உண்மையில் நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை. வீக் எண்ட் எபிசோடில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil 7 Day 8 Maya Refuse To Go Small Boss House Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Maya Refuse To Go Small Boss House Idamporul

கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இல்லத்தார்களும் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் சென்றாலும் கூட, மாயா மட்டும் செல்ல மறுத்தார். காரணம் என்னவென்று கேட்டால் ’பிரதீப் என்ன கொன்னாலும் கொன்றுவான். அவன் கூட அந்த வீட்ல இருக்கவே பயமா இருக்கு. கூல் சுரேஷ் அவர பார்த்தாலும் எனக்கு பயமா இருக்கு. அவர் வந்ததுல இருந்தே என்கிட்ட ராங்கா தான் நடந்துக்கிறார்’ அப்படின்னு மாயா வெளிப்படையா சொல்லி அந்த ஹவுஸ்குள்ள போக மறுக்குறாங்க.

தொடர்ந்து மாயா எல்லார்கிட்டையும், எல்லா கேமரா முன்னமும், பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் குறித்து மிகவும் கேவலமான வார்த்தைகளால் சாடி வருகிறார். இது என்னமான மனநிலை என்பது தான் தெரியவில்லை. ஒருவர் இப்படித்தான்னு எப்படி இவங்களாவே ஜட்ஜ் பண்ணிக்கிறாங்கன்னு தெரியல. பார்க்கலாம் மாயா இதற்கு நிச்சயம் ஏதாச்சு குட்டு வாங்குவார் என்று நினைக்கிறேன்.

Bigg Boss Tamil 7 Day 8 Bava Asking To Walk Out From BB Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Bava Asking To Walk Out From BB Idamporul

நேற்றைய எபிசோடு, பவா அவர்களை நிறையவே பாதித்து விட்டது என்று நினைக்கின்றேன். தொடர்ந்து அவரால் வீட்டின் அழுத்தத்தை தாங்கி கொள்ள முடியவில்லை போல. அதுவும் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு தன்னை பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியே அனுப்புமாறு பவா கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையின்படி பிக்பாஸ்சும் அவரை இல்லத்தை விட்டு வெளியேற்றினார்.

Bigg Boss Tamil 7 Day 8 Vishnu Saravanan Argument Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Vishnu Saravanan Argument Idamporul

’என்ன ஏன் சோம்பேறின்னு முத்திரை குத்தின, நான் தூங்கி என்னிக்காச்சு நாய் குரைச்சிருக்கா’ என விஷ்ணு முதலில் என்னவோ சரவணனிடம் சரியாக தான் கேள்வி கேட்டார். ஆனால் அதற்கு பின்னர் விவாதம் எங்கெல்லாமோ சென்று முட்டி மோதி ஒரு கேப்டன் என்றும் பாராமல் அவரை வச்சு செய்து விட்டார். ஏதோ தன்னுடைய குரல் ஓங்கி வெளியில் கேட்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விஷ்ணு விவாதம் செய்வது போல இருக்கிறது.

Bigg Boss Tamil 7 Day 8 Maya About Pradeep In Confession Room Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Maya About Pradeep In Confession Room Idamporul

’பிரதீப்பால் தனக்கு பயமாக இருக்கிறது’ என, தொடர்ந்து வெளியில் சொன்ன அதே விஷயங்களை கன்பஷன் ரூமிலும் வந்து மாயா கூறினார். பிக்பாஸ்சும் இங்கு 24 மணி நேரமும் கேமராக்கள் இருக்கிறது. நானும் இருக்கிறேன் என கூறி ஆறுதல் சொல்லி மாயாவை ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைத்தார்.

Bigg Boss Tamil 7 Day 8 Vishnu Wantedly Fighting For Everything Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Vishnu Wantedly Fighting For Everything Idamporul

குரல் உயர்த்தி பிடித்து, ஒவ்வொரு விஷயத்திற்கும் பிரச்சினை செய்தால் வெளியில் நம்மை பேசுவார்கள் என்று ஒரு தவறான ஸ்ட்ரேட்டஜியை கையில் எடுத்து இருக்கிறார் போல விஷ்ணு. பிரதீப், விக்ரம், மணி, ஜோவிகா என ஒவ்வொருவரிடம் விஷ்ணு தனது ஆக்ரோஷத்தை காட்டி தன் இயல்பை கெடுத்து வருகிறார். இன்னும் என்ன என்ன செய்ய போகிறார் என்பது தெரியவில்லை.

Bigg Boss Tamil 7 Day 8 Ration Discussion Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Ration Discussion Idamporul

ரேசன் குறித்து வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் கேப்டன் சரவணன் டிஸ்கஸ் செய்தாரா என்பது தெரியவில்லை. முக்கியமாக அந்த வீட்டில் சமையல் பொறுப்பில் இருந்த யுகேந்திரன், விசித்ரா உள்ளிட்டவர்களிடம் டிஸ்கஸ் செய்து விட்டு மார்கெட்டிற்குள் நுழைந்து இருக்கலாம். அவர்களுக்கு அங்கு என்ன என்ன பொருட்கள் மிச்சம் இருக்கிறது, என்ன என்ன இல்லை, என்பது தெரிந்து இருக்கும். கேட்க தவறி விட்டார் கேப்டன்.

மார்க்கெட்டிற்கு சென்று இஸ்டத்திற்கு பொருட்களை அள்ளி வந்தார்கள், முக்கியமான பொருளான சுகர் மிஸ்சிங். ஒரு வாரத்திற்கு டீ, காபிக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை. தக்காளி ஏற்கனவே இருந்ததாம் அதை மீண்டும் அள்ளி எடுத்து வந்திருக்கிறார்கள். வெறும் 2 கிலோ மீனை எடுத்து வந்து எப்படி ஒட்டு மொத்த வீட்டிற்கும் சமைத்து பிரித்து கொடுக்க போகிறார்கள் என தெரியவில்லை என விசித்ரா புலம்பிக் கொண்டு இருந்தார்.

Bigg Boss Tamil 7 Day 8 Nomination Process Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Nomination Process Idamporul

வழக்கமான நாமினேசன் பிராசஸ் தான், பெரியவரின் இல்லத்தில் இருப்பவர்கள், சிறியவரின் இல்லத்தில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும். சிறியவரின் இல்லத்தில் இருப்பவர்களை பெரியவரின் வீட்டில் இருப்பவர்கள் நாமினேட் செய்ய வேண்டும்.அந்த வகையில்

ஸ்மால் பாஸ் இல்லத்தில் நாமினேட் செய்யப்பட்டவர்கள் – விஷ்ணு (9 Votes), மாயா (6 Votes), பிரதீப் (3 Votes)
பிக்பாஸ் இல்லத்தில் இருந்து நாமினேட் செய்யப்பட்டவர்கள் – அக்‌ஷயா (4 Votes), விசித்ரா (2 Votes), ஜோவிகா (3 Votes), பூர்ணிமா (2 Votes)
ஒட்டு மொத்தமாக 7 பேர் எலிமினேசனுக்கான நாமினேசனில் இருக்கின்றனர்.

Bigg Boss Tamil 7 Day 8 Cool Suresh Coconut Comedy Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Cool Suresh Coconut Comedy Idamporul

மொத்த பில் 51, 756 ரூபாய், இங்க பாருங்க ஒரு தேங்கா அழுகி இருக்கு, அதுனால நீங்க எங்க பில்ல இருந்து முப்பதோ, நாப்பதோ கழிச்சிருங்கன்னு, கேமரா முன்னாடி கூல் சுரேஷ் சொல்ல, உடனே ரெண்டு தேங்காவ அனுப்பி விட்டார் பிக்பாஸ். அப்புறம் வழக்கம் போல தன் பாணியில் பிக்பாஸ்சிற்கு வணக்கம் வைத்தார் கூல் சுரேஷ். ’வெந்து தணிந்தது காடு, பிக்பாஸ்சிற்கு ஒரு வணக்கத்த போடு’

Bigg Boss Tamil 7 Day 8 Arrest Warrent Issue Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Arrest Warrent Issue Idamporul

அடுத்ததாக வீட்டில் சிறப்பாக செயல்படாத இருவருக்கு பிக்பாஸ் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்து இருந்தார். அந்த வகையில் இந்த வாரம் தேர்வு செய்யப்பட்டவர் அக்‌ஷயா மற்றும் வினுஷா. இருவருமே வீட்டில் இருப்பதே தெரிவதில்லை. ஏதாவது ஒன்றை பண்ணி தன்னுடைய இருப்பை தொடர்ந்து நிரூபிப்பார்களா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இன்னொரு பக்கம் இவர்கள் இருவருக்கும் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்த போது விஷ்ணு மற்றும் மாயா செம்ம குஷியாக விசில் அடித்து விட்டார்கள். அது ஏனோ அக்‌ஷயாவிற்கு சிறிய மனஸ்தாபத்தை ஏற்படுத்தி விட்டது போல, அக்‌ஷயா சற்றே அழுதுவிட்டார்.

Bigg Boss Tamil 7 Day 8 Akshaya Feel About Vishnu Shouting Idamporul
Bigg Boss Tamil 7 Day 8 Akshaya Feel About Vishnu Shouting Idamporul

” இன்று நிறையவே பிரச்சினைகள், விஷ்ணுவின் ஆக்ரோஷம், பிரதீப்பின் அமைதி, நாமினேசன், ரேசன் பிரச்சினை, அரெஸ்ட் வாரண்ட் என்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முரண்பாடுகள். இனி ஒவ்வொரு நாளும் என்ன நிகழ போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் ‘

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author