Bigg Boss Tamil 7 | Day 9 | Review | ‘இறங்கி அடிக்கும் ஸ்மால் பாஸ் ஹவுஸ் இல்லத்தினர்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஒன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: சமையல் ஆர்டர் பிரச்சினை – வெறுப்பேத்தும் குட்டி ஹவுஸ் இல்லத்தினர் – BB House VS SB House – பிரதீப் மறுத்தல் – கூல் சுரேஷ் கூல் ஐடியா – ஹவுஸ் க்ளீனிங் டாஸ்க் – அக்ஷயா பெர்மார்மன்ஸ் – கழுவ போவது யாரு டாஸ்க் – மாயா மற்றும் பிரதீப் – குட்டி ஹவுஸ் கேப்டன்சிப் டிஸ்கஸன் – கோல்டு ஸ்டார் டாஸ்க்
பிக்பாஸ் இல்லத்தினர் கொடுத்த சமையல் மெனுவில் ஒவ்வொருவருக்கும் வகை வகையான ஒவ்வொரு உணவு போல எழுதப்பட்டு இருந்தததால், இதனை செய்ய முடியாது, குழுவாக சேர்ந்து ஒரே உணவாக சொல்லுங்கள் என ஸ்மால் பாஸ் ஹவுஸ் இல்லத்தினர் ஒன்றாக சேர்ந்து கூறினர். இதனை வார்த்தையாக சொல்லாமல் கொஞ்சம் நக்கலாகவும் சொன்னதால் இல்லத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
வெறுப்பேத்துவதற்காகவே ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்டினர் ஆடிய ஒரு டான்ஸ் அருமையாக இருந்தது. இது பிக்பாஸ் ஹவுஸ்மேட்டினரை கடுப்பேத்தவே, அவர்களும் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்டினருக்கு எதிராக சதியை துவங்கினர். நாளைக்கு நாம சொன்னா தான அவங்க அடுப்பு பத்த வைக்க முடியும். அப்ப நம்மகிட்ட யாராச்சு கெஞ்சுவாங்கள்ல அப்ப பார்த்துக்களாம். அப்ப நாம இதே டான்ஸ் ஆடி நம்ம அவங்கள வெறுப்பேத்துவோம் என முடிவெடுக்கின்றனர். இதற்கு முன்னர் ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்தவர்கள் அந்த வீட்டினை சமையலுக்கு மட்டுமே உபயோகித்தார்கள். தற்போது இருப்பவர்கள் தான் அதை சாதுரியமாக உபயோகிக்கிறார்கள்.
பிரதீப் மற்ற ஸ்மால் பாஸ் ஹவுஸ் இல்லத்தினர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவ்வளவாக உடன்பாடு காட்டவில்லை. அவருக்கு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கேட்ட மெனுவை செய்து கொடுத்து இருக்கலாம் என்று தோன்றியதாக கூறுகிறார். என்ன தான் ஆரம்பத்தில் இருந்தே கேம் கேம் என்ற மைண்டில் இருந்தாலும் கூட தற்போது இரண்டு நாளாக பிரதீப் தெளிவாக விளையாடிக் கொண்டு இருக்கிறார்.
வீட்டில் போரிங் பெர்பாமர்ஸ் வினுஷா மற்றும் அக்ஷயா அவர்களுக்கு பிக்பாஸ் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்தார். இதனை முன்னிருத்தி கூல் சுரேஷ் ஏதேனும் டாஸ்க் வந்தால் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுங்கள். அவர்களையும் அவர்களின் திறமைகளையும் மக்களும் பிக்பாஸ்சும் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என கூல் சுரேஷ் கூறிய விதம் அழகாக இருந்தது. அனைவரும் அதை ஏற்றுக் கொள்ளவும் செய்தனர்.
மாயா, பூர்ணிமா இருவரும் பேசிக் கொள்வதை பார்க்கும் போது, மாயாவிற்கு ஏதோ விஜய் மீது க்ரஸ் இருப்பதாக தெரிகிறது. பூர்ணிமாவிற்கு சரவணன் மீது க்ரஸ் இருப்பதாக தெரிகிறது. போட்டி என்பது நிச்சயம் எமோசன்களுக்கு தடையாக இருக்கும். நாளை எமோசன்களையும் போட்டிகளையும் இருவர்களும் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
மாயா, தனக்கும் பிரதீப்பிற்கும் இடையேயான பிரச்சினைகளை பிரதீப்பிடம் பேசி சமாதானம் ஆகிக் கொள்கிறார். ’ஈரெதிர் துருவங்கள் இணையும் என்றே இயற்பியல் எழுதியதோ’ என்ற வரிகளுக்கு ஏற்ப இருவரும் சமாதானம் ஆகி Hug எல்லாம் செய்து கொண்டது ட்விஸ்ட். ஆனால் மீண்டும் சண்டையெல்லாம் போட்டுக் கொள்வோம் இது இப்போதைக்கு என ஐஸ்ஷூவிடம் இருவரும் கூறினர்.
இந்த முறை நாம் செஞ்ச ஒன்னு ஒன்னுக்கும் பிக்பாஸ் இல்லத்தினர் யாரும் மீண்டும் கேப்டன் ஆனால் நம்ம எல்லாரையும் வச்சு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. நம்ம எல்லாரையும் திரும்பவும் இந்த இல்லத்துக்குள்ளயே போடவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் நம்மல்ல இருந்து ஒரு ஸ்ட்ராங் போட்டியாளர் கேப்டன் ஆகனும், என ஸ்மால் பாஸ் இல்லத்தினர் முடிவெடுக்கின்றனர்.
பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் ஹவுஸ் போட்டியாளர்களுக்கு இடையேயான ஹவுஸ் க்ளீனிங் டாஸ்க் செம்ம போட்டியாக இருந்தது. விஜய் ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து களம் இறங்கினார். அக்ஷயா பிக்பாஸ் இல்லத்தில் இருந்து களம் இறங்கினார். விஜய்க்கு செம்ம டஃப் கொடுத்தார் அக்ஷயா. கடைசி ஒரு வினாடியில் மட்டுமே அக்ஷயாவின் வெற்றியை தட்டிப்பறித்தார் விஜய். இதனால் ஹவுஸ் க்ளீனிங் பொறுப்பு பிக்பாஸ் இல்லத்தினரிடம் சென்றது.
கழுவபோவது யாரு டாஸ்க்கிலும் பிக்பாஸ் இல்லத்தின் வினுஷா, ஐஸ்ஷூக்கு பெரிய அளவுக்கு டஃப் கொடுக்கவில்லை. ஐஷூ, வினுஷாவை எளிதாக வென்று வெற்றியை ஸ்மால் ஹவுஸ்சிடம் ஒப்படைத்தார். இதனால் கழுவ போவது யாரு டாஸ்க்கிலும் பிக்பாஸ் இல்லத்தினர் தோல்வியை சந்தித்தனர்.
அடுத்ததாக கோல்டு ஸ்டார் டாஸ்க், இந்த வீட்டில் யார் அதிகமாக எண்டர்டெயிண்ட்மெண்ட் செய்கிறார் என்பதை போட்டியாளர் முன் நின்று சொல்ல வேண்டும் அதற்கு மற்ற போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் எதிர்விவாதம் வைக்கலாம். இதில் இரண்டு வீட்டின் போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம். முதலில் கூல் சுரேஷ் அவர்கள் பேசினார்.
வழக்கம் போல அவரது பேச்சு காமெடியாக ரசிக்கும் படி இருந்தததால் அவர் கூறிய ஒவ்வொன்றுக்கும் போட்டியாளர்கள் பெருமளவில் விவாதத்தை முன் வைக்கவில்லை. அவர் ஜாலியாக பேசுவதை அனைவரும் ரசிக்கவே செய்தனர். விவாதம் முடிந்ததும் ’எப்படியும் ஒருத்தனும் ஓட்டு போட மாட்டிங்க போங்கடா’ என போட்டியாளர்களுக்கு அவர் விட்ட சாபமும் காமெடியாக இருந்தது. கூல் சுரேஷ் என்பதால் பெரிய விவாதம் இல்லை. நிச்சயம் நாளைய எபிசோடில் இந்த டாஸ்க் இல்லத்தில் சரவெடியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
“ ஸ்மால் பாஸ் ஹவுஸ்ல இருந்து என்ன என்ன பண்ண முடியும்னு இதுக்கு முன்னாடி இருந்தவங்களுக்கு தெரியல, சமையல் மட்டும் தான் பண்ணிட்டு இருந்தாங்க, ஆனா இப்ப இருக்கிற மாயா, விஜய், விஷ்ணு, ஐஷூ இங்க இருந்துட்டும் நம்மளால ஆட முடியும் ஒரு வித்தியாசமான ஆட்டத்தை காட்டுறாங்க. இதுனால ஆட்டம் பிக்பாஸ் VS ஸ்மால் பாஸ்னு மாறி இருக்கு. இப்போதைக்கு ஸ்மால் பாஸ் இல்லத்தினரின் கைகள் ஓங்கி இருக்கிறது “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !