பிக்பாஸ் தமிழ் சீசன் 7 விறு விறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் பிரபல போட்டியாளர் ஒருவர் 16 இலட்சத்துடன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், இல்லத்திற்குள் ஒருவர் பணப்பெட்டியுடன் வெளியேறும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பணப்பெட்டியின் மதிப்பு 16 இலட்சத்தை எட்டிய போது பிக்பாஸ்சின் பிரபல போட்டியாளரான பூர்ணிமா ரவி பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு இல்லத்தை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ ஏற்கனவே பூர்ணிமா ரவியை சுற்றி பல நெகட்டிவ் அலைகள் சுற்றி வந்த நிலையில் நிச்சயம் அவர் எடுத்துக் கொண்ட இந்த பணப்பெட்டி வாய்ப்பு சரியானதே என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “