பிக்பாஸ் பிரதீப் ஆண்டனியின் வாழ்வில் இவ்வளவு சோகங்களா?

Bigg Boss Tamil 7 Pradeep Anthony Real Life Story Idamporul

Bigg Boss Tamil 7 Pradeep Anthony Real Life Story Idamporul

பிக்பாஸ் சீசன் 7 தமிழில் கலந்து கொண்டு இருக்கும் பிரதீப் அவர்களின் வாழ்க்கை முழுக்க இருட்டுக்களால் சூழப்பட்டது என கூறி வருகின்றனர். அது குறித்து பார்ப்போம்.

பிரதீப் ஒரு எளிமையான குடும்பத்தை சார்ந்தவராம். தந்தை ஒரு குடிகாரர், குடிப்பதும் பிரதீப்பின் தாயை போட்டு அடிப்பதுமெனவே வாடிக்கையாக வைத்து இருந்திருக்கிறார். ஒரு சமயத்தில் குடித்து விட்டு பிரதீப்பின், தாய் தந்தையினரிடையே பிரச்சினை முற்றி, தாயை உயிரோடு எரித்து இருக்கிறார் தந்தை. அதற்கு பின்னர் அவரும் குடித்து குடித்து உடலைக் கெடுத்து வரும் தவறி இருக்கிறார். பிரதீப்பின் சிறு வயதிலேயே இருவரும் தவறி அவர் ஆதரவற்று நின்று இருக்கிறார்.

இப்படி ஆதரவற்று நின்ற பிரதீப் அவர்களுக்கு, அவரது சித்தி ஆதரவு அளித்து படிக்கவும் வைத்து இருக்கிறார். பின்னர் விவரம் தெரிய ஆரம்பித்ததும் கையில் கிடைக்கும் வேலைகளை படிக்கும் போதே செய்வாராம். எல்லா வேலைகளையும் செய்து இருக்கிறாராம். பின்னர் படித்து முடித்து விட்டு கொஞ்சம் சினிமா பக்கம் ஆர்வம் வந்து இருக்கிறது. இயக்குநர் ஆக தான் ஆசைப்பட்டு இருக்கிறார்.

ஆனால் வாய்ப்பு கிடைத்தது நடிகராக, தமிழில் அருவி, வாழ், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பின்னர் சரியாக வாய்ப்புகள் இல்லை. தற்போது ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் கதைகளை எழுதிக் கொண்டு இருக்கிறாராம். வெகுவிரைவில் அவரது இயக்கத்தில் ஒரு படமும் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

“ பிக்பாஸ்சில் தற்போது வரை ஒரு சிறப்பான யுக்தியை வெளிப்படுத்தி வருகிறார். மற்ற போட்டியாளர்களை காட்டிலும் ஒரு வித்தியாசம் காட்டுகிறார். அது அவரை தனியாக காண்பிக்கிறது. அவரது கனவுகளுக்கு இந்த பிக்பாஸ் வழிகாட்டிடுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author