Bigg Boss Tamil 7 | ‘இரண்டு பேரும் ரூலை மீறும் வரையிலும் கேப்டன் நீங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?’
Bigg Boss Tamil 7 Day 2 Fight Between Pradeep And Vijay Idamporul
விசித்திரா மற்றும் யுகேந்திரன் ரூலை மீறிய விவகாரத்தில், கேப்டன் விஜய் மற்றும் பிரதீப் இடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விசித்திரா மற்றும் யுகேந்திரன் என ‘இரண்டு பேரும் ரூலை மீறும் வரையிலும் கேப்டன் நீங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?’ என பிரதீப் கேட்க ‘உங்களுக்கு பதில் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்ல’ன்னு கேப்டன் விஜய் சொல்ல விவாதம் அப்படியே வளர்ந்து கொண்டே செல்கிறது. முடிவில் என்ன ஆனது என்பதை எபிசோடில் பார்க்கலாம்.
பிரதீப் விவாதம் கேள்விகள் என எல்லாவற்றையும் சரியாக தான் முன் வைக்கிறார். ஆனால் விவாதம் ஆரம்பித்த பின்னர் அடுத்தடுத்து என்ன முன் வைப்பது என்பதை மறந்து விடுகிறார் போல. சற்றே கொஞ்சம் கேப் விட்டு விவாதிக்கிறார். கேட்க வேண்டும் என்பதற்காக கேட்கிறாரா என்பது தான் விளங்கவில்லை.
“ சற்றே பிரதீப் செய்வதை எல்லாம் பார்க்கும் போது அவர் இன்னோரு அசீம் ஆகலாம் என்று ட்ரை பண்ணுவது போல இருக்கிறது “