விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஆரம்ப வேலைகள் முன்னரே தொடங்கிவிட்டது.
இந்த சீசனிலும் உலக நாயகன் கமலஹாசன் அவர்களே தொகுப்பாளராக இருக்கப் போகிறார். புதுப்புது போட்டியாளர்களுடன் புதுப்பொலிவுடன் இந்த நிகழ்ச்சி வரப்போகிறது.
ஆகஸ்ட் மாதம் கடைசியில் புது பிக்பாஸ் லோகோ வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த சீசன் 2021 அக்டோபர் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தொடங்கி 2022 பொங்கல் சமயத்தில் முடிவடையும் என்றும் தெரிகிறது.