Bigg Boss Tamil | Season 6 | ‘ஜனனி வெளியேறிய பின்னர் ஆளே மாறிப்போன அமுது’
Bigg Boss Season 6 Amudhavanan Idamporul
ஜனனி பிக்பாஸ் ஹவுஸ்சில் இருந்து வெளியேறியது முதல் ஒரு புது வித அமுதவாணனை பார்க்க முடிவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஜனனி பிக்பாஸ் ஹவுஸ்சில் இருந்து வெளியேறியது முதல் அமுதவாணன் வீட்டில் துருதுருவென்று இருக்கிறார். ஜனனி இருக்கும் வரை கம்முன்னு இருந்தவர் தற்போதெல்லாம் நானும் வீட்டில் இருக்கிறேன் என்று குரலை உயர்த்தி காட்டுகிறார்.
ஓவராக ட்ரிகர் ஆகிறார். இது தான் அவர் சுயரூபமோ இவ்வளவு நாள் அடக்கி வைத்து இருந்தாரோ என ரசிகர்களும் கேள்வி எழுப்ப துவங்கி இருக்கின்றனர்.
“ ஷிவின் அவர்களின் எமோசனை அமுதவாணன் காமெடியாக்கியதும் சரி, அசீம் அவர்களிடம் கோபப்படுவதாக நினைத்து தரக்குறைவாக விமர்சித்ததும் சரி நிச்சயம் கண்டிக்கதக்கதே “