Bigg Boss Tamil | Season 6 | ‘அசீம் நல்லவரா, கெட்டவரா? ‘
Bigg Boss Season 6 Mohammed Azeem
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் மேடையில் வஞ்சிக்கப்படும் அசீம் அவர்கள் நல்லவரா, கெட்டவரா என்பது தான் பிக்பாஸ் ரசிகர்களின் ஆகப்பெரிய குழப்பமாக இருக்கிறது.
ஒரு மனிதன் அவன் அவனாகவே இருக்கிறானா என்பதை சோதிக்கும் ஆகச்சிறந்த ஒரு போட்டி தான் பிக்பாஸ். இங்கு அசீம் அசீமாக தான் இருக்கிறார். அவரது மிகப்பெரிய மைனஸ் அவரது கோபமும் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் மட்டுமே. அதை மட்டும் தவிர்த்தாலே அவர் ஒரு சிறந்த போட்டியாளராக நிச்சயம் இருப்பார்.
“ ஒரு பக்கம் அசீம் அவர்களுக்கு எதிர்ப்புகள் வலுத்தாலும் கூட, அவர் அவராகவே இருக்கிறார் என்பதற்காக அவருக்கான ரசிகர்களும் அதை விட அதிகமாக தான் இருக்கிறார்கள். வரும் நாட்களில் வார்த்தைகள் பயன்படுத்துவதில் மட்டும் தெளிவாக இருந்தால் கடைசி வாரம் வரை நீடிக்கவும் அசீம் அவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு “