Bigg Boss Tamil | Season 6 | Day 88 | Promo 1 | ‘அடுத்த டாஸ்க்ல வச்சி செய்வேன் உங்கள, சபதம் எடுத்த அசீம்’

Bigg Boss Tamil Season 6 Promo 1 Azeem Vs Shivin And Rakshitha

Bigg Boss Tamil Season 6 Promo 1 Azeem Vs Shivin And Rakshitha

பிக்பாஸ் தமிழின் 88 ஆவது நாளிற்குரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சைக்கிள் டாஸ்க்கில் நன்றாக விளையாடி இரண்டாவது இடத்தில் இருந்த அசீம், ஷிவின் விரித்த வலையில் சிக்கி கதிரவனுக்கு அடுத்ததாக இரண்டாவது ஆளாக டாஸ்க்கில் இருந்து எலிமினேட் ஆனார். இதனால் கடுப்பாகிய அசீம், அடுத்த டாஸ்க்ல உங்களை வச்சு செய்வேன் ஷிவின்,ரக்‌ஷிதா என சபதம் எடுத்து இருக்கிறார்.

பொதுவாக 3 பேர் இருந்தால் ஓட்டும் நேரத்தை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்ள சரியாக இருக்கும் ஆனால் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கும். இரண்டு பேர் இருக்கும் பட்சத்தில் யாராவது ஒரு ஆள் நீண்ட நேரம் ஓட்ட வேண்டியது வரும். ஆனால் இடைஞ்சல் கம்மி தான். இதை கண்வைத்தே ஷிவின், அசீம் மற்றும் விக்ரமன் ஓட்டிக்கொண்டு இருக்கும் சைக்கிளை கேட்டு அசீமை கவுத்தார்.

“ டாஸ்க் என்றாலே விட்டுக்கொடுக்காமல் விளையாடுவது தான், விக்ரமன் தாராள பிரபுவாக விட்டுக் கொடுத்துவிட்டார். கடைசியில் அதில் சிக்கியது அசீம் தான் “

About Author