Bigg Boss Tamil | Season 6 | ’கமல் அவர்கள் முழுக்க முழுக்க விக்ரமனுக்கு அட்வகேட்டாகவே செயல்படுகிறார் – முன்னாள் போட்டியாளர்’
Kamal Haasan Bigg Boss Tamil Season 6 Idamporul
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும் நிலையை எட்டி இருக்கும் இந்த சமயத்தில் கமல் குறித்து முன்னாள் போட்டியாளர் ஒரு கருத்தை முன்வைத்து இருக்கிறார்.
ஒவ்வொரு வார இறுதி எபிசோடுக்கு வரும் கமல்ஹாசன் அசீம் அவர்களை முழுமையாக டார்கெட் செய்துவிட்டு, விக்ரமனுக்கு முழுக்க முழுக்க அவர் பக்கம் இருந்து அவரது அட்வகேட்டாகவே செயல்படுவதாக பிக்பாஸ்சின் முன்னாள் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி கடுமையாக சாடி இருக்கிறார்.
“ வார இறுதி எபிசோடுகள் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதில் ஒருவரை மட்டும் எதிர்த்துவிட்டு இன்னொருவர் பக்கம் கமல் அவர்கள் நின்று பேசுவது என்பது ஒரு தலைபட்சமாகவே இருப்பதாக பிக்பாஸ் ரசிகர்களும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “