BB Ultimate | Day 2 | Promo 1 | ‘காபிய குடுத்து வெளில அனுப்பி விடுங்க எல்லாத்துக்கும் பிரச்சினை பண்ணுது’

Bigg Boss Ultimate Day 2 Promo 1 Is Out
பிக்பாஸ் அல்டிமேட்டின் இரண்டாவது நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
’தலை வலிக்குது, காது வலிக்குது எனக்கு காபி வந்தே ஆகனும்’ என்று காபிக்கும் பஞ்சாயத்தை துவங்கி இருக்கிறார் வனிதா. எதற்கெடுத்தாலும் சண்டை போட வேண்டும் என்ற மன நிலையோடு வந்து இருப்பார் போல வனிதா. ஷாரிக்கும் அதே காரணத்தை கூறி காபி கொடுத்து அவரை வெளியில் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கிறார்.
“ வனிதாவிடம் சொல்லி அனுப்பி இருப்பார்கள் போல, புரோகிராம் எகிற வேண்டுமெனால் சண்டையிட்டுக் கொண்டே இருங்கள் என்று, எதற்கெடுத்தாலும் ஒவ்வொருவரிடமும் சண்டைக்கு செல்கிறார் வனிதா “