BB Ultimate | Day 3 | Promo 2 | ‘நான் எதுக்கு அடக்கமா இருக்கனும்’
பிக்பாஸ் அல்டிமேட்டின் மூன்றாவது நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சண்டைய வச்சே இந்த அல்டிமேட்டை பிரபலம் ஆக்கிடலாம் என்ற தப்பான எண்ணங்களோடு ஒளிபரப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எல்லா புரோமோவிலும் சண்டை மயமாக தான் இருக்கிறது. மூன்று நாள் கூட ஆகவில்லை முப்பதுக்கும் மேற்பட்ட சண்டை. இந்த முறை அது வனிதா வெர்சஸ் சுரேஷ் தாத்தாவுக்கு இடையில்.
“ எல்லா பிக்பாஸ்சிலும் குறைந்தது மோதல் என்பது தொடங்குவதற்கு குறைந்தது 15 நாட்கள் ஆவது ஆகும், இந்த பிக்பாஸ் அல்டிமேட்டிலோ முதல் நாளில் இருந்தே மோதல் துவங்கி விட்டது “