பிக்பாஸ் அல்டிமேட் | இரண்டாவது போட்டியாளர் யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!

Bigg Boss Ultimate Second Contestant Officially Confirmed

Bigg Boss Ultimate Second Contestant Officially Confirmed

பிக்பாஸ் அல்டிமேட்டின் சுவாரஸ்ய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில் இரண்டாவது போட்டியாளர் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

வரும் ஞாயிறு அன்று விமர்சையாக தொடங்க இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட்டின் தமிழ் பதிப்பின் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முதல் போட்டியாளர் சிநேகன் என்று ஒளிபரப்பு நிறுவனம் அறிவித்து இருந்த நிலையில், இரண்டாவது போட்டியாளர் ஜூலி என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

“ நேர்மறையாக புகழ்பெற்றவர்கள் ஒரு சிலர் என்றால், ஜூலி எதிர்மறையான விமர்சனங்கள் மூலம் புகழ் பெற்றவர். அந்த வகையில் இந்த பிக்பாஸ்சை எப்படி எதிர் கொள்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author