குக் வித் கோமாளி 5 | ’வெகு விரைவில் புரோமோ, களம் இறங்கும் புதிய Chef’
Actor And Chef Replacing Venkat Butt In Cook With Comali Season 5 Fact Here Idamporul
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் புரோமோ வெகுவிரைவில் வெளியாகும் எனவும், தாமுவுடன் இணைய புதிய Chef ஒருவரையும் டெலிவிஷன் அணுகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்களாக ஹிட் அடித்த நிலையில், ஐந்தாவது சீசனை துவங்கும் முன்னமே ஆயிரம் பிரச்சினைகள் கிளம்பியது. முதலாவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் நிகழ்ச்சியில் இருந்து விலகியது. அதற்கு பின்னர் Chef வெங்கடேஷ் பட் அவர்களும் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதனால் சீசன் 5 துவங்குமா துவங்காதா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்து இருக்கிறது.
வெகு விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5 ஒளிபரப்பு ஆரம்பிக்க இருக்கிறதாம். முதலாவதாக அதற்கான புரோமோ ஷூட் வேலைகள் தற்போது அரங்கேறிக் கொண்டு இருக்கிறதாம். Chef வெங்கடேஷ் பட் அவர்களுக்கு பதிலாக நடிகரும், பிரபல Chef -வுமான மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களிடம் டெலிவிஷன் பேசி இருக்கிறதாம். அவரும் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் தந்தையிடம் இருந்து சமையல் கற்றவர். மிகப்பெரிய அளவில் கேட்டரிங்க நிறுவனமும் நடத்தி வருகிறார். பெரிய பெரிய பிரபலங்களின் நிகழ்வுகளுக்கு பெரிய அளவில் கேட்டரிங் செய்து கொடுத்து வருகிறாராம். நடிகராகவும் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது முழுக்க முழுக்க கேட்டரிங் தொழில் செய்து வருவதாகவும், குக் வித் கோமாளி சீசன் 5 -க்கு இவரையே வெங்கட் பட் அவர்களுக்கு பதில் Chef ஆக டெலிவிஷன் நியமித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ தாமு – வெங்கடேஷ் பட் காம்போ அது ஒரு மிகப்பெரிய Fun காம்போ, அப்படி பட்ட காம்போ ஒன்று உடைந்து விட்டது ரசிகர்களுக்கு வருத்தம் தான், இருந்தாலும் ரங்கராஜ், தாமுவுடன் இணைந்து பட் அவர்களின் இடத்தை நிச்சயம் நிரப்புவார் என நம்புவோம் “