ஜீ தமிழ் புகழ் டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார்!
Dancer Ramesh Committed Sucide Idamporul
ஜீ தமிழ் புகழ் டான்சர் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டிக் டாக் மற்றும் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன டான்சர் ரமேஷ் அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட நாட்களாகவே அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது ஆயினும் தற்கொலைக்கான காரணம் சரியாக தெரியவில்லை.
“ சரியான வாய்ப்புகள் இல்லை என அவர் பல பேட்டிகளில் கூறி இருந்ததை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் அது தான் காரணமா என்பது சரியான விசாரணையில் மட்டுமே தெரிய வரும் “