Eeramaana Rojave 2 Today Episode | 13.04.2022 | Vijaytv
eeramana Rojave 2. 13.04.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியா, பார்த்திபன் காவ்யா அனைவரும் மருவீட்டு விருந்துக்கு துரை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். பின் சக்தி அனைவரையும் கலாய்க்கும்படி கலகலப்பாக பேசினார். ஆனால் அதற்கு பதிலாக காவ்யா பிரியா மற்றும் ஜீவா பார்த்திபன் என யாருமே பேசவில்லை. காவ்யா படும் வேதனையில் பார்த்து மஹா மனதிற்குள் அழுது புலம்பினார். வெளியில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் mudiyaaml தவித்தார். காவ்யா ஜீவா இருவரும் பார்த்துக்கொள்வது, அவர்கள் படும் கஷ்டத்தை நேரடியாக பார்த்த மஹா கடவுளிடம் வேண்டினார். அவர்கள் நிலையை மாத்து, எதற்காக இவளோ பெரிய தண்டனை என்று கேட்டார். பின் காவ்யா பிரியா சக்தி மூவரும் பேசினார்கள். அப்போது சக்தி அவர்கள் புகுந்த வீட்டில் அனைவரும் எப்படி நடந்தது கொள்கிறார்கள் என்று விசாரித்தார். அதற்கு பிரியா தன்னை ஜீவா நல்லா பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். அதே போல் காவ்யா தன்னை பார்த்திபன் அக்கறையோடு இருக்கிறார் என்று கூறினார். பின் அனைவரையும் விருந்து சாப்பிட அழைத்தார்கள். ஆனால் காவ்யா தனக்கு பசிக்கவில்லை என்று கூறினார். பின் அவரை வீட்டில் அனைவரும் பேசி அழைத்து வந்து சாப்பிட வைத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…