Eeramana Rojave 2 Today Episode | 01.06.2022 | Vijaytv
eeramana Rojave 2. 01.06.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் அவரது அறையில் திருமண புகைப்படத்தை மாட்டி வைத்தார். அதை பார்த்த காவ்யா, பார்த்திபன் மீது கோவம்கொண்டார். நான் உங்களுக்கு ஒரு நல்ல தோழியாக மட்டுமே இந்த வீட்டில் இருப்பதாக கூறினேன். ஆனால் இந்த போட்டோவை பார்த்தால் எனக்கு சங்கடமாக இருக்காதா என்று கேட்டார். இதை எல்லாம் இங்கு மாட்ட வேண்டாம் என்று கூறினார். பார்த்திபனும் அதற்கு சரி என்று கழட்டி வைத்தார். பின் ஒரு வேலை சம்பந்தமான ஃபைல் கெஸ்ட் ஹவுஸ்-இல் இருப்பதாக கூறி பார்த்திபன் மற்றும் லிங்கம் அங்கு சென்றார்கள். ஆனால் அங்கு ஜீவாவின் அறையில் இருப்பதால் அவர் அறையை திறக்க முயற்சித்தார்கள். ஆனால் அதை திறக்க முடியவில்லை. அந்த சாவி ஜீவாவிடம் இருக்கும் என்று லிங்கம் ஜீவாவுக்கு அழைத்து விஷயத்தை கூறினார். அதை கேட்டதும் ஜீவா அதிர்ச்சி அடைந்தார். பார்த்திபன் திறக்க முயற்சி செய்தார் ஆனால் திறக்கவில்லை. ஆனால் அவருக்கு அவசர ஃபோன் கால்கள் வந்தபடி இருந்ததால் அவர் கீழேயே நின்று பேச ஆரம்பித்தார். ஆனால் அதற்குள் லிங்கம் எதையாவது செய்து கதவை திறக்க வேண்டும் என்று கம்பியை போட்டு திறந்தார். அதை திறந்து பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். உள்ளே முழுவதும் காவ்யாவின் புகைப்படம் அவருக்கு வாங்கி வைத்த பரிசுகள் ஜீவா மற்றும் காவ்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என அனைத்தயும் அவர் பார்த்து உறைந்து போய் நின்றார். இவளோ பெரிய தவறை வீட்டில் செய்து விட்டார்களே என்று வருந்தினார். இதனால் தான் காவ்யா பார்த்திபன் இடம் முகம் குடுத்து கூட பேசுவதில்லை என்று அவருக்கு புரிய வந்தது. மேலும் பார்த்திபன் இதை பார்க்க கூடாது என்று அவரே ஃபைலை எடுத்து பார்த்திபன் கையில் கொடுத்து அனுப்பி வைத்தார். அப்போது ஜீவா அங்கு உள்ளே வந்ததும் அவரை அழைத்து சென்று இதை எதற்காக என்னிடம் மறைத்தாய் என்று கேட்டார். ஜீவாவால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க …