Eeramana Rojave 2 Today Episode | 01.08.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.08.2022

eeramana Rojave 2. 01.08.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யாவுக்கு தெரியாமல் வைத்த மருதாணியை காலையில் எழுந்ததும் பார்த்து கோவம்கொண்டார் காவ்யா. ஆனால் அதை பார்த்திபன் என்ன என்னவோ பேசி அவரை சமாதானம் செய்தார். அவருக்கு காபி போட்டு கொடுத்து படிக்க சொன்னார். மேலும் காவ்யா என்னதான் திட்டினாலும் அதை சற்றும் யோசிக்காமல் தட்டி விட்டு, மீண்டும் காவ்யாவிடம் தான் பேசினார். மேலும் காதல் செய்தால் அனைவரும் முட்டாள் தான். காதலுக்கு கண் இல்லை, காது இல்லை, எதுவுமே இல்லை , அதனால் என்ன திட்டினாலும் மீண்டும் காவ்யாவிடம் வருவேன் என்று கூறினார். பிரியா அவரது ஹோமில் இருக்கும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த விளையாட்டு திடலில் இருந்தார். அப்போது ஜீவா குழந்தைகளுக்கு இனிப்பு கொடுக்க வந்து இருந்தார். அப்போது ஜீவாவிடம் பிரியா தேவி அத்தையிடம் பேசிய விஷயம் என்ன ஆச்சு என்று கேட்டார். அதற்கு ஜீவா தன் அத்தை நரேன் என்றால் யார் என்றே தெரியாது என்று கூறியதாக சொன்னார். ஆனால் அதில் தனக்கு நம்பிக்கையே இல்லை என்றும் கூறினார். அந்த நரேனுக்கு பின்னாடி என் அத்தை தன இருக்க வேண்டும். அதனால் தான் பிரியாவை கல்யாணம் அன்று கடத்தி இருக்க வேண்டும். இதன்க தான் நம் நால்வரின் வாழ்க்கையே மாறிப்போய் யாருமே நிம்மதியாக இல்லை என்றும் கோவப்பட்டர். ஆனால் பிரியா, என்னதான் நரேன் தவறு எய்தாலும், அதனால் நமக்கு நல்ல வாழ்க்கை தானே அமைந்து உள்ளது என்று கூறினார். மேலும் காவ்யா பார்த்திபன் போன்ற ஒரு ஆளுக்கு மனைவி ஆனது அவளும் குடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் ஜீவா அதை கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்க்க கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author