Eeramana Rojave 2 Today Episode | 02.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 02.05.2022

eeramana Rojave 2. 02.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அனைவர் முன்னிலையிலும் தான் இந்த வீட்டு மருமகளாக இருக்காதான் விருப்பம் என்று கூறியதை பார்த்து தேவி மற்றும் மஞ்சு இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். மஹா காவ்யாவை தனியாக பார்த்து நன்றி கூறினார். என்னதான் விருப்பம் இல்லை என்றாலும் எல்லார் முன்னிலையிலும் விட்டு கொடுக்காமல் பேசியதை கேட்டு நெகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். மேலும் தானும் உன்னை தான் சந்தேகபட்டேன் என்று மன்னிப்பும் கேட்டார். காவ்யா எரிச்சலில் தன்னை தனியாக விடும்படி கூறினார். பின் நாளை தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தார் காவ்யா. அந்த நேரம் பார்த்திபன் அங்கு வந்து பேசினார். வீட்டில் தேவி அத்தைக்கு உன்மேல் என்ன கோவமோ தெரியவில்லை இப்படி நடந்து கொண்டார் என்று வருந்தினார். மேலும் காவ்யா தெளிவாக பதில் சொன்னதை நினைத்து மிகவும் சந்தோசமாக இருப்பதாக கூறினார். ஆனால் காவ்யா இந்த வீட்டு மருமகளாக தான் இருப்பேன். நான் எப்போதும் காவ்யா மட்டும் தான் காவ்யா பார்த்திபன் இல்லை என்று கூறினார். இதனால் பார்த்திபன் வேதனை அடைந்தார். காவ்யா இப்படி சொன்னதால் பார்த்திபன் ஒரு நிலையில் இல்லை. வேலையில் தடுமாற்றம் இருந்தது. இதனால் ஜீவா என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது பார்த்திபன் தன்னால் காவ்யாவை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று கூறினார். மேலும் காவ்யா பேசியதை ஜீவாவிடம் கூறினார். தனக்கு ஒரே குழப்பமாக இருப்பதாக கூறினார். ஜீவா என்ன சொல்வது என்றே புரியாமல் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author