Eeramana Rojave 2 Today Episode | 02.09.2022 | Vijaytv
eeramana Rojave 2. 02.09.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் குடும்பத்தோடு முதல் முறையாக வெளியே செல்ல ஆசையாக பூ போட்டு புடவை என்று கிளம்பினார். ஆனால் பார்வதி அவர் அறைக்கு வந்து காவ்யாவை விஷேஷத்துக்கு வர வேண்டாம் என்று கூறினார். நீ வீட்டில் இருந்து பரிட்சைக்கு படி என்று கூறினார். உனக்கு விருப்பம் இல்லாமல் இந்த வீட்டில் நடந்தது கொல்ல வேண்டாம், மேலும் உன் விருப்பம் இல்லாமல் விசேஷம் எதிலும் கலந்துகொள்ள வேண்டாம். எப்போவாக இருந்தாலும் இந்த வீட்டை விட்டு நீ வெளியே போக போகிறாய் அதனால் எதற்கு பார்த்திபன் மனைவி என்று வெளியே சொல்ல வேண்டும். அதனால் நீ வர வேண்டாம் என்று கூறினார். இதை கேட்டதும் காவ்யா மனம் உடைந்து போனார். பின் வீட்டில் அனைவரும் விஷேஷதுக்கு கிளம்பினார்கள். அப்போது பார்த்திபன் காவ்யாவை அழைத்து வர சென்றார். ஆனால் பார்வதி காவ்யாவுக்கு வேறு வேலை இறுக்கம் அவள் வரவில்லை என்று பொய் சொல்லி தடுத்தார். இருந்தாலும் பார்த்திபன் காவ்யாவை அழைத்து வர மாடிக்கு சென்றார். காவ்யா தன் மன கஷ்டத்தை மறைத்து பார்த்திபன் இடம் வெறுப்பாக பேசுவது போல் நடித்தார். தன்னால் எங்கும் வர முடியாது என்று கூறினார். இதனால் பார்த்திபன் கோவ்தில் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…