Eeramana Rojave 2 Today Episode | 04.04.2022 | Vijaytv
eeramana Rojave 2. 04.04.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இரண்டு ஜோடிகளும் திருமணம் முடிந்து வீட்டுக்குள் வந்தார்கள். காவியாவையும் பிரியாவையும் விளக்கு ஏற்ற சொன்னார்கள். பின் மணமக்கள் இருவரையும் பால் பழம் கொடுத்து அமர வைத்தார்கள். பின் மருமகள்கள் இருவரும் பால் காய்ச்சி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் காவ்யா தனக்கு தலை வலிப்பதாக கூறினார். அதனால் காவ்யாவை அவரது அறையில் ஓய்வு எடுக்க அனுப்பினார் பார்வதி. பிரியா மட்டும் பால் காய்ச்சி வீட்டில் அனைவருக்கும் கொடுத்தார். அப்போது தேவி மற்றும் மஞ்சு இருவரும் சேர்ந்து பிரியாவை அசிங்க படுத்துவது போல் பேசினார்கள். ஆனால் பிரியா அதை வெளியில் காட்டிக்கொள்ள வில்லை. காவ்யா தலை வலி என்று கூறியதால் அவருக்கு மாத்திரை பார்வதி நேராக கொடுக்காமல் பார்த்திபன் இடம் கொடுத்துவிட்டார். பார்த்திபன் அதற்கு தயங்கினார். ஆனால் பார்வதி நீதான் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவரும் வேறு வழி இன்றி மாத்திரை பாலை காவ்யாவுக்கு கொடுத்தார். ஆனால் காவ்யா அதை வாங்கவில்லை. பார்த்திபன் அதை புரிந்துகொண்டு நகர்ந்து சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…