ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவை ஜீவா அறைக்கு பார்வதி அழைத்து வந்தார். அப்போது காவ்யா ஜீவாவுக்கு அழைத்து பேசினார். உடனே பேச வேண்டும் என்று கூறினார். உடனே பார்க்க வேண்டும் என்றார். முதலில் தயங்கினாலும் பின் ஜீவா அவரை பார்க்க சென்றார். அங்கு காவ்யா அழுது புலம்பினார். தன்னால் இத நாடகமான வாழ்கையை வாழ முடியாது. இப்போதே நம் காதலை பற்றி வீட்டில் சொல்லலாம் என்று கூறினார். காவ்யா நெருங்கி வர வர ஜீவா தள்ளி சென்றார். இதை கவானித்த காவ்யா வருந்தினார். இனி நம் வாழ்க்கை என்ன ஆவது என்று புலம்பினார். ஆனால் ஜீவா, பார்த்திபன் உன் கழுத்தில் தாலி கட்டிய நிமிஷமே நமக்குள் இருந்த உரிமை போய் விட்டது என்று கூறினார். மஞ்சு அருணாச்சலம் இடம் சண்டை போட்டார். தன் மகளை ஜீவாவுக்கு திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக கூறினார். ஆனால் அருணாச்சலம் அந்த கல்யாணம் என் பொறுப்பு, அதை பற்றி கவலை பட வேண்டாம் என்று உறுதி கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…