Eeramana Rojave 2 Today Episode | 05.05.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா எத்தனையோ முறை ஜீவாவுக்கு அழைத்து பார்த்தார். ஆனால் ஜீவா அதை எடுக்காததால் நேரில் பார்த்து பேச வந்தார். ஜீவா காவ்யாவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். உடனே எதற்காக என்னை பார்க்க வந்தாய் என்று பதறினார். இனி நாம் பேச எதுவும் இல்லை நாம் இருவருக்கும் வேறு வேறு ஆட்களோடு திருமணம் முடிந்து விட்டது என்றார். ஆனால் காவ்யா அது சம்பந்தமாக பேசதான் வந்தேன் என்றார். உடனே கையில் ஒரு பேப்பரை எடுத்து காமித்து அது விவாகரத்து படிவம், எனக்கு பார்த்திபன் உடன் வாழ விருப்பம் இல்லை என்றார். ஜீவா அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். இப்படி எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் காவ்யா தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் வெளியே செல்ல தான் போகிறேன். ஆனால் ஜீவா பிரியா வாழ்கையில் மன தலையிட மாட்டேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அந்தோசமாக வாழலாம் என்று கூறி பதிலுக்கு காத்திருக்காமல் சென்றார். ஜீவா அதை கேட்டதில் இருந்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றார். பின் குடிக்க கிளம்பினார். பிரியா ஜீவாவுக்கு என்ன பிடிக்கும் என்று ஒவ்வொன்றாக பார்வதியிடம் கேட்டு தெரிந்துகொண்டு சமைக்க ஆரம்பித்தார். ஜீவா அளவுக்கு அதிகமாக குடித்து தடுமாறி ரோட்டில் வாந்தி எடுத்து விழுந்து கிடந்தார். அதே நேரம் பிரியா இரவு 12 மணி ஆகியும் ஜீவாவுக்காக காத்திருந்தார். ஜீவா விழுந்துகிடந்த இடத்தை துரை கடந்து சென்றார். அப்போது ஜீவாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…