ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா ஜீவாவை தனியாக பார்த்து பேசினார். தன்னால் இந்த வாழ்க்கையில் வாழ முடியாது என்று கூறினார். இது ஒரு நரகம் போல் உள்ளது என்று கூறினார். உடனே வீட்டில் பேசி நம் காதலை பற்றி சொல்லிவிடலாம் என்று கூறினார். ஆனால் ஜீவா இனி நமக்குள் எதுவும் இல்லை. பார்த்திபன் உன் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து நமக்கான உரிமைகள் மாறிவிட்டது என்று கூறினார். இனி இதுதான் நமக்கு எழுதப்பட்ட விதி என்று மனதை மாற்றிக்கொள்ளும்படி கூறினார். கவியாவால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அருணாசலம் இடம் துரை தன் வருத்தத்தை கூறினார். ஆனால் அருணாச்சலம் எதை பற்றியும் கவலை பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். பின் இரண்டு தம்பதிகளுக்கு சாந்தி முகூர்த்த ஏற்பாடுகள் நடந்தது. இருவர் அறையையும் அழங்கருதார்கள் அர்ஜுன் மற்றும் லிங்கம். பின் இரவு சாப்பிடும் போது அருணாச்சலம் எந்த சூழ்நிலையில் இந்த திருமணம் நடந்து இருந்தாலும் இனி வாழ்கையை எப்படி வாழவேண்டும் என்று கூறினார். இதை கேட்டு ஜீவா காவ்யா இருவருமே கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். காவ்யா அதற்கு உங்கள் விருப்பத்திற்காக தன் இந்த திருமணம் ஆனால் இதில் எப்படி வாழ்வோம் என்று தெரியவில்லை என்று கூறினார் அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…