Eeramana Rojave 2 Today Episode | 06.06.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா தன் நெஞ்சில் குத்தி இருந்த பச்சையை அழைத்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். ஆனாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் வீட்டுக்கு வந்ததும் குளித்து விட்டு படுத்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் வந்தது. இதை கவனித்த பிரியா உடனே அவருக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்து, மாத்திரை கொடுத்து, ஒத்தடம் கொடுத்து அவரை ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டார். இதை கவனித்த பார்வதி மிகவும் அந்தோசம் அடைந்தார். ஜீவா மீது இவளோ அன்பு வைத்திருக்கிறாள் பிரியா என்று பெருமை கொண்டார். இதனால் இதே போல் காவ்யாவும் மாற வேண்டும் என்று காவ்யாவுக்கு கேட்கும்படி பேசினார். மறை முகமாக காவ்யாவும் அவரது புருஷனை இப்படி தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட காவ்யா எந்த பதிலும் சொல்லாமல் கிளம்பினார். டுத நாள் ஜீவா நெஞ்சில் எதோ காயம் இருப்பதை பார்த்தார் பிரியா. அது என்ன என்று கேட்ட பின் அது பச்சை குத்தியதை அழித்த விஷயம் தெரிய வந்தது. இதனால் பிரியா மிகவும் சந்தோசம் கொண்டார். தனக்காக இப்படி ஒரு வேளை செய்ததில் தனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் இந்த நெஞ்சில் இருந்த பச்சையை அழித்தது போல் அந்த பெண்ணின் நினைவுகளையும் மனதில் இருந்து சீக்கிரமே அழித்து விடுவார் என்று நம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author