Eeramana Rojave 2 Today Episode | 06.07.2022 | Vijaytv
eeramana Rojave 2. 06.07.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் கவயாவை எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசித்தார். ஆனால் காவ்யா அதற்கு கோவம் கொண்டார். மேலும் வீட்டில் நாம் ஏதோ சேர்ந்து வாழ்வதாக பொய்யான சந்தோசத்தை அனுபவிக்க வேண்டாம் என்றார். இப்படி ஒரு பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என்றும் கூறினார். வீட்டுக்கு ஜோசியர் ஒருவர் வந்தார். அவர் பிரியா மயரும் ஜீவாவின் ஜாதகங்களை பார்த்து ஜோடி பொருத்தம் அம்சமாக உள்ளது என்று கூறினார். லட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த மாதிரியான ஜாதகம் அமையும். 10 பொருத்தமும் உள்ளது. வாழ்கையில் நல்ல நிலைக்கு வருவார்கள் என்று கூறினார். இதை கேட்டு வீட்டில் அனைவரும் அந்தோசதில் பூரித்தார்கள். அடுத்ததாக பார்த்திபன் காவ்யா இருக்கும் ஜாதகம் பார்த்தார்கள். பார்த்ததில் எப்படி இந்த ஜாதககாரர்களை திருமணம் செய்ய முடிந்தது? இது இரண்டும் ஒன்று சேராத ஜாதகம் என்றார். அதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். பார்வதி இதற்கு எதாவது பரிகாரம் இருக்கிறதா என்று கேட்டார். அவரும் அதற்கு பரிகாரம் கூறினார். பார்த்திபனின் தாய் அல்லது தாரம் யாராவது ஒரு ஆள் இந்த பரிகாரம் செய்ய வேண்டுமென்றார். காலையில் இருந்து இரவு வரை தண்ணீர் கூட அருந்தாமல் இருந்து முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செய்து கோவிலில் அங்கப்ரதட்சனம் செய்ய வேண்டும் என்றார். அவரும் பரிகாரத்தை சொல்லி விட்டு கிளம்பினார். ஆனால் காவ்யா இதை எல்லாம் தன்னால் செய்ய முடியாது. தனக்கு நம்பிக்கை இல்லை என்றார். உடனே பார்வதி தானே இதை செய்வதாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க …