ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் அவர் குடும்பத்தில் அருணாச்சலம், பார்வதி, லிங்கம் மற்றும் பார்த்திபன் அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருந்தார்கள். மேலும் காவ்யா மேல் ஏகப்பட்ட செக்சனில் கேஸ் போட போவதாக அங்கு இருந்தவர்கள் கூறினார்கள். பின் அருணாச்சலம் தன் நண்பன் ஒருவர் ஓய்வு பெற்ற கலெக்டர் என்பதால் அவரை சிபாரிசு பேச அழைத்தார். ஆனால் அவர் பேசிய போலீஸ் ஸ்டேஷனில் யாரும் மதிக்கவில்லை. இனியும் காவ்யா மீது எல்லா FIR போடப்படும் என்று கூறினார்கள். இதனால் காவ்யாவை அருணாச்சலம் அவர்களிடமே மன்னிப்பு கேட்குமாறு கூறினார்கள். ஆனால் கவய அதை மறுத்து விட்டார். மேலும் இதில் காவ்யா பக்கம் பார்வதியும் இருந்தார். பின் சற்று நேரத்தில் ஜீவா மற்றும் பிரியா இருவரும் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். பின்னர் அவர்களும் போலீஸ் இடம் பேசி பார்த்தார்கள். ஆனால் அவர்கள் காவ்யாவின் அக்க என்று சொன்னதும் வெளியே போகும்படி வேகமாக கூறினார்கள். பின் பிரியா தான் ஒரு வக்கீல் என்று கூறி பேச ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…