ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருந்தார்கள். அவர் கூடவே மொத்த குடும்பமும் துணையாக இருந்தார்கள். பிரியா ஜீவா இருவரும் பாதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். அவர்களை பார்த்து நடந்ததை கூறினார்கள். இதை கேட்டதும் கண்டிப்பாக தங்களால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறி அவர் கைப்பட புகார் ஒன்றை எழுதினார். அவரும் அவரது மனைவியும் கை எழுத்து போட்டு கொடுத்தார்கள். அதை பிரியா வாங்கிக்கொண்டு இந்த புகாரை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். ஆனால் அந்த போலீஸ்காரர் அவர்கள் நேரில் வராமல் இந்த புகார் செல்லாது என்று சொல்லி அந்த புகாரை கிழித்து போட்டார். பிரியா மற்றும் ஜீவா அதிர்ச்சி அடைந்தார். பின் பார்வதி ந்றும் வீட்டில் அனைவரும் காவ்யாவை தவிர இங்கு இருக்க வேண்டாம் என்று விரட்டினார்கள். ஆனால் பார்வதி இவள் என் மருமகள் இவளை தனியாக விட்டு வர முடியாது என்று கூறினார். இதை பார்த்த காவ்யா கண்ணீர் விட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….