ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா உடல் நிலை தேரி வீட்டுக்கு வந்தார். வந்தவரை பார்த்திபன் முடிந்த அளவு அவரே எல்லாமே செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் காவ்யாவுக்கு சாப்பாடு ஓட்டுவது அவருக்கு உடற்பயிற்சி செய்ய உதவி செய்வது என்று செய்தார். ஆனால் அதை முடிந்த வரை பார்வதி தடுக்கவே செய்தார். காவ்யாவும் அவரை முடிந்த வரை அவரை தவிர்க்கவே நினைத்தார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. மேலும் காவ்யா பார்த்திபனை கடுமையாக பேசிவிட்டு இவரும் சேர்ந்து நொந்து கொண்டார். பார்த்திபன் முடிந்த வரை காவ்யாவுக்கு உதவி செய்ய நினைத்தாலும் அதற்கான சூழ்நிலை இல்லை. பார்வதி மேலும் காவ்யாவை எப்படி பார்த்திபன் வாழ்க்கையில் இருந்து பிரிப்பது என்று யோசித்தார். சக்தி காலேஜில் அவரை காதலிப்பதாக ஒருவன் அவரை தொந்தரவு செய்தான். ஆனால் சக்தி அதை கண்டு கொள்ளவில்லை. இருந்தும் மிரட்ட ஆரம்பித்தான். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…