ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் தன் அறையில் தங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். இதனால் பார்த்திபன் மிகவும் சந்தோசம் கொண்டார். அவரால் அதை நம்பவே முடியவில்லை. மேலும் காவ்யா மிக பொறுமையாக தான் பேசுவதற்கு பதில் கூறியதை பார்த்து ஆச்சர்ய பட்டார். அதை எல்லாம் யோசித்து கண்டிப்பாக காவ்யா மனம் மாறுவார் என்று நம்பிக்கை அவருக்கு வந்தது. பின் இருவரும் ஒரு அறையில் தூங்க தயார் ஆகும்போது உங்களோடு இருப்பது எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை என்று கூறி தூங்க ஆர்மாபித்தார். அடுத்த நாள் மஹா கோவிலுக்கு சென்று காவ்யா பேரிலும் பிரியா பேரிலும் அர்ச்சனை செய்தார். சற்று நேரத்தில் அங்கு பார்வதியும் வந்தார். அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்தார்கள். பார்வதி அவரது வீட்டில் ஒரு சுமங்கலி பூஜை செய்ய உள்ளதாக கூறினார். அதை செய்து முடித்தால் வீட்டில் கண்டிப்பாக நல்ல விஷயங்கள் நடக்கும் என்று கூறினார். மகாவும் அதற்கு சரி என்றார். மேலும் அவரும் கலந்து கொள்வதாக கூறினார். பின் வீட்டில் பிரியா காவ்யா இருவரையும் அழைத்து பேசினார்கள். காவ்யா தனக்கு பரிட்சை இருப்பதால் இதில் கலந்துகொள்ள முடியாது என்று கூறினார். ஆனால் பிரியா அதெல்லாம் அவள் கலந்துகொள்வாள் என்று உறுதி அளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…