Eeramana Rojave 2 Today Episode | 08.07.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா அவரது அம்மா பாதயாத்திரை சென்ற கோவிலுக்கு பூஜை ஏற்பாடுகள் செய்ய கிளம்பினார். அப்போது பிரியா தானும் வருவதாக கூறினார். பின் பார்த்திபன் காவ்யா, ஜீவா பிரியா அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். போன இடத்தில் பிரியா காவ்யாவுக்கு அறிவுரை கூறினார். இது போல ஒரு மாமியார் கிடைக்க குடுத்து வைத்து இருக்க வேண்டும் என்றார். மேலும் மருமகளுக்காக இது போல் உடம்பை வருத்தி பரிகாரம் செய்வது சாதாரண விஷயம் இல்லை என்றார். அதனால் அவர்களுக்காகவாவது பார்த்திபன் உடன் சேர்ந்து வாழ முயற்சி செய் என்று கூறினார். பின் நால்வரும் கோவிலுக்குள் செல்லும்போது ஒரு சாமியார் அவர்களை அழைத்து பேசினார். அவர்களது திருமணம் நினைத்தபடி நடக்கவில்லை என்றாலும் இது கடவுள் போட்ட முடிச்சு என்று கூறினார். இதுவரை எப்படி இருந்தாலும் இனி அவர்கள் வாழ்வில் நல்லதே நடக்கும் என்றார். பார்த்திபன் காவ்யா இருவருக்கும் இனி நல்ல நேரமே என்றும் அவர்களுக்கு 6 குழந்தைகள் பிறக்கும் என்றும் கூறினார். மேலும் பிரியா ஜீவா இருவருக்கும் இரட்டை குழந்தை பிறக்கும் என்றார். அதை கேட்டதும் காவ்யா என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author