Eeramana Rojave 2 Today Episode | 08.11.2022 | Vijaytv
eeramana Rojave 2. 08.11.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, தேவி போட்டியில் கலந்து கொள்ள போவது தெரிந்ததும் தன் நண்பனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன் என்று கூறினார். ஆனால் தேவி, எனக்கு எதிராக அந்த துரையை போட்டியில் கலந்து கொள்ளகூடாது என்று எச்சரித்தார். ஆனால் ஜீவா தோல்வியை பார்த்து பயம் வந்து விட்டதோ என்று பதிலடி கொடுத்தார். பிரியா ஜீவாவுக்கு வாங்கிய சட்டையை பார்த்து, எப்படி இதை அவரிடம் கொடுப்பது என்று யோசனையில் இருந்தார். மேலும் இந்த சட்டையை கண்டிப்பாக அவர் தன்னை முழு மனதோடு ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த நேரம் காவ்யா மஹா அனைவரும் அந்த சட்டையை பார்த்தார்கள். காவ்யா எதோ ஒரு ஞாபகத்தில் இந்த சட்டை ஜீவாவுக்கு பத்தாது என்று கூறினார். பிரியா உடனே எப்படி இந்த விவரம் உனக்கு தெரியும் என்று கேட்டார். ஆனால் மஹா அதற்கு எதோ ஒரு பதில் சொல்லி சமாளித்தார். அதே நேரம் சக்தி பேப்பரில் தன் அக்கா இருவரது கல்யாண ஃபோட்டோவை போட்டு வாழ்த்து சொல்லி இருப்பதை பார்த்து வீட்டில் காமித்தார். பார்த்திபன் தான் இந்த வேலையை செய்து இருக்க வேண்டும் என்று யோசித்தார் காவ்யா. அதே போல் பார்த்திபன் தான் இதை செய்து இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….