Eeramana Rojave 2 Today Episode | 09.06.2022 | Vijaytv
eeramana Rojave 2. 09.06.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா தூக்கம் வரவில்லை என்று தனியாக நின்றுக்கொண்டு இருந்தார். அதை பார்த்த ப்ரியா எதற்கு தனியாக நிற்க வேண்டும் என்னோடு பேசிக்கொண்டு இருங்கள் என்றார். பின் ஜீவாவின் கனவு என்ன? திருமணத்துக்கு முன் எப்படி வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நினைத்தார். அவரது லட்சியம் என்ன என்று கேட்டார். ஜீவாவும் தனக்கு தன் அப்பாவை போல் ஒரு நல்ல பில்டர் ஆக வேண்டும் என்று கூறினார். குறைந்த விலையில் தரமான வீட்டை காட்டுவதே என் லட்சியம் என்றார். பின் பிரியா தன் லட்சியத்தை பற்றி கூறினார். தன் இல்லத்தில் இருப்பவர்களை முழுக்க தன்னால் முடிந்த உதவியை செய்து கொடுக்க வேண்டும். மேலும் இது போல் பல இல்லங்களை திறந்து ஆதரவு இல்லாத பெரியவர்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். அடுத்த நாள் அவர்களது திருமண ஆல்பம் வந்தது. அதை எடுத்துக்கொண்டு நேராக காவ்யாவை பார்க்க சென்றார். காவ்யா படித்துக்கொண்டு இருந்தார். ஆனாலும் அவரிடம் இந்த ஆல்பத்தை கொடுத்து பார்க்க வைத்தார். ஆனால் காவ்யா அதை பின்பு பார்ப்பதாக கூறி வைத்தார். பிரியா போன பின் அந்த ஆல்பத்தை தூக்கி எரிந்தார். அந்த நேரம் பார்த்திபன் அங்கு வந்தார். அவரை சமாதானம் செய்தார் காவ்யா மனதை எப்படியும் மாற்றி விடலாம் என்று அவருக்கு தோன்றியது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…