ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, காவ்யா மற்றும் ஜீவா இருவரும் கோவிலில் பார்த்து பேசினார்கள். நேத்து காவ்யா வீட்டில் அனைவரும் பதட்டம் அடைந்தது, காவ்யா திட்டு வாங்கியது என்று அனைத்தையும் கூறினார். அதை கேட்ட ஜீவாவும் கேலி கிண்டல் என்று பேசினார். பின் பிரியா நிச்சயதார்த்ததிர்க்கு புடவை எடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு காவ்யா, சக்தி எல்லாரும் நாளைக்கே கடைக்கு சென்று வாங்கலாம் என்று முடிவு எடுத்தார்கள். பின் இந்த விஷயத்தை ஜீவாவிடம் காவ்யா கூறினார். ரம்யா தன் மாமா பார்த்திபனை நினைத்து வீடு முழுவதும் அவரது போட்டோக்களை ஒட்டி வைத்து இருந்தார். அதை பார்த்த தேவி அதிர்ச்சி அடைந்தார். உடனே பார்வதியை அழைத்து அதை காட்டினார். என் மகள் பார்த்திபன் மீது இவளோ காதல் வைத்து இருக்கிறாள் என்று பார் என்றார். எப்படியாவது இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு என்றார். ஆனால் பார்வதி தன் மகனுக்கு விருப்பம் இல்லாமல் எப்படி இந்த திருமணத்தை நடத்த முடியும் என்று கேட்டார்! இதை கேட்ட தேவி மீண்டும் கோவம் கொண்டார். நான் என் தம்பி அருணாச்சலம் இடம் பேசிக்கொள்வதாக கூறினார். பார்த்திபன் வேலை செய்யும் இடத்திற்கு அவரை சந்திக்க ஒருவர் வந்தார். அவர் யார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…