Eeramana Rojave 2 Today Episode | 11.04.2023 | Vijaytv
eeramana Rojave 2. 11.04.2023
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாய் கட்டும்போது சந்தியா அவரை தடுத்தார். பார்த்திபன் சட்டையை பிடித்து இழுத்து வண்டியில் ஏற்றினார். வீட்டில் உள்ள அனைவருமே மாறி மாறி சந்தியாவிடம் பேசி பார்த்தார்கள். ஆனால் அவர் பார்த்திபனை வண்டியில் ஏற்றினார். தேவி தான் இப்படி செய்து இருக்க வேண்டும் என்று அருணாச்சலம் அவருக்கு அழைத்தார். ஆனால் அவர் அந்த போனை எடுக்கவே இல்லை. ஆனால் திடீர் என்று ஒரு ஆட்டோவில் ரம்யா வந்து இறங்கினார். அவர் பங்குக்கு பக்கம் பக்கமாக வசனம் பேசினார். என் திருமணம் நின்றதற்கு யாரும் பதரவில்லை என்று குத்தலாக பேசினார். பின் சந்தியாவிடம் இந்த புகாரை தானே வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என்று கூறினார். பின் இவருக்கு ஜெயில் தண்டனை எல்லாம் பத்தாது, என் வாழ்க்கையை பார்த்து பார்த்து குற்ற உணர்ச்சியில் சாகும் வரை இருக்க வேண்டும். அது தான் நான் பார்த்திபனும் கொடுக்கும் ஒரு தண்டனை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…