Eeramana Rojave 2 Today Episode | 11.07.2022 | Vijaytv
eeramana Rojave 2. 11.07.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யாவுக்காக பார்வதி பாத யாத்திரை செய்து கோவிலுக்கு வந்து கொண்டு இருந்தார். அதே நேரம் காவ்யா மற்றும் பார்த்தினன் இருவரும் கோவிலில் செய்ய வேண்டிய சடங்குகள் மற்றும் பூஜையை செய்ய ஆரம்பித்தார்கள். பார்வதி வரும் வழியில் கல்லிலும் முள்ளிலும் வந்தார். காலில் இரத்தம் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தன் மகன் வாழ்க்கைக்காக இதை செய்ய வேண்டும் என்று வைராக்கியமாக நடந்தார். வரும் வழியில் மயக்கமும் அடைந்தார். பின் வழியில் போனவர்கள் அவரை தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்து அவரை ஆசுவாசபடுத்தி மீண்டும் நடக்க வைத்தார்கள். கோவிலில் சூரியன் அஸ்த்தமனத்துக்குள் பார்வதி வர வேண்டும் என்று கூறினார்கள். பார்த்திபன் மற்றும் காவ்யா செய்ய வேண்டிய பூஜை அனைத்தும் செய்து முடித்தார்கள். ஆனாலும் பார்வதி வரவில்லை. மேலும் பதட்டம் அடைந்தார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் பார்வதி வந்து சேர்ந்தார். வந்ததும் கோவிலை மூன்று முறை சுற்றியும் வந்து அபிஷேகத்திற்கு செய்ய வேண்டியதையும் செய்து முடித்தார். இதை பார்த்த காவ்யா தனக்காக எதுக்கு இவளோ பெரிய விஷயம் செய்ய வேண்டும் என்று கண் கலங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…