Eeramana Rojave 2 Today Episode | 12.05.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா இரவு 10 மணி ஆகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று வீட்டில் அனைவருமே பதட்டமாக இருந்தார்கள். ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தேவி காவ்யா மீது பழி போட்டார். காவ்யாவுக்கு இந்த வீட்டில் இருக்க விருப்பம் இல்லை, அதனால் தான் இந்த வீட்டை விட்டு வெளியே போய் விட்டதாக கூறினார். பார்த்திபன் காவ்யாவுக்கு பரிந்து பேசினார். காவ்யா அந்த மாதிரி செய்யும் ஆள் இல்லை என்றார். தேவையை எதிர்த்து பேசினார். ஆன்லைன் தேவி தான் சொன்னது போல் தான் நடக்கும் என்று உறுதியாக இருந்தார். பார்த்திபன் உடனே காவ்யாவை தேடி அவர் படிக்கும் இடத்துக்கு கிளம்பினார். அங்கு யாரும் இல்லை, 6 மணிக்கே முடிந்து விட்டது என்று கூறினார்கள். இதனால் அக்கம் பக்கம் என்று தேட ஆரம்பித்தார் பார்த்திபன். ஜீவாவிடம் பிரியா புலம்பித்தள்ள உடனே ஜீவா தானும் தேடி பார்ப்பதாக கிளம்பினார். சக்திக்கு அழைத்து பிரியா பேசினார், அப்போது அங்கு காவ்யா வரவில்லை என்று தெரியவந்தது. பார்த்திபன் மழையை கூட பொருட்படுத்தாமல் காவ்யாவை தேடி அலைந்தார். கடைசியில் வீட்டுக்கு எமாற்றதோடு பார்த்திபன் மற்றும் ஜீவா திரும்பினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author