Eeramana Rojave 2 Today Episode | 12.06.2023 | Vijaytv
2023 06 12 16 15 25
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவின் தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் நல்லபடியாக முடிந்தது. அதை முடித்த கையோடு பிரியா இங்கு தங்க மாட்டேன் என்று கிளம்பினார். ஆனால் அருணாச்சலம், பார்வதி என்று அனைவரும் அவரை தடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் கோவ்தில் அருணாச்சலம் ஜீவாவை கத்த ஆரம்பித்தார். நீ செய்த பெரிய தவறினால் தான் இன்னமும் பிரியா உன்னை மன்னிக்கவில்லை, இதை நீ சரி செய்தே ஆக வேண்டும். இனியும் என்னால் வீட்டுக்கு வந்த மருமகளை வெளியே அனுப்ப முடியாது, என்று கூறினார். எதாவது செய்து அவள் மனதை மாற்று, இல்லை என்றால் உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை என்று கூறினார். இதனால் மீண்டும் ஜீவா பிரியாவிடம் தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டனர். தூக்கு தண்டனை கைதிக்கு கூட வாய்ப்பு கொடுக்கிறார்கள். ஆனால் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடையாதா? என்று கேள்விகளை அடுக்கினார். இதற்கு பின் பிரியாவும் மனம் மாறி, சரி நான் இந்த வீட்டில் இருக்கிறேன் என்று சம்மதித்தார். ஆனால் இனியும் ஜீவா ஒரு சிறு தவறு செய்தால் கண்டிப்பாக அதை நான் மன்னிக்கவே மாட்டேன். நேரடியாக விவாகரத்து வாங்குவேன் என்று கூறினார். வீட்டில் அனைவருமே இப்போதைக்கு இந்த வீட்டில் தங்குவது போதும் என்று நினைத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….