Eeramana Rojave 2 Today Episode | 12.07.2022 | Vijaytv
eeramana Rojave 2. 12.07.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்வதி தன் மகன் மருமகளுக்கு பரிகாரம் பூஜை அனைத்தையும் செய்து முடித்து வீட்டுக்கு திரும்பினார். அவரது காலில் கல்லும் முள்ளும் குத்தி இரத்தம் வந்து இருந்தது. அதனால் அவரால் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். பின் பிரியா பார்வதிக்கு மருந்து போட்டுவிடுவது, அவருக்கு ஒத்தடம் கொடுப்பது என்று பார்த்துக்கொண்டார். பிரியா இது போல ஒரு மாமியார் கிடைக்க நானும் என் தங்கையும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் பார்வதி நீங்கள் மருமகள்கள் அமைய நான்தான் கொடுத்து வைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்த ஆனாலும் இந்த நிலையில் இருப்பதை காவ்யாவிடம் சொல்ல வேண்டாம், அவளும் சங்கட பட வேண்டாம் என்று கூறினார். ஆனால் காவ்யா iavrgl பேசுவதை வெளியே நின்று கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார். மேலும் தனக்காக தன் மாமியார் இவளோ கஷ்டபடுவதை பார்த்து வருந்தினார். மேலும் இப்படி அன்பை கொட்டி தன் மனதையும் மாற்றி விடுவார்களோ என்ற பயம் காவ்யாவுக்கு வந்தது. ஆனால் ப்படி நடக்க கூடாது என்றும் நினைத்தார். எப்போதும் தன்னால் பார்த்திபனும் நல்ல மனைவியாக இருக்க முடியாது என்று நம்பினார். அடுத்து நாள் பார்வதியின் தோழி ஒருவர் வீட்டுக்கு வந்து இருந்தார். அவரது புது கடை திறப்பு விழாவுக்கு அழைக்க வந்து இருந்தார். அப்போது பார்வதி பார்த்திபன் தன் மூத்த மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார். அதே போல் இளைய மருமகள் என்று பிரியாவை அறிமுகம் செய்தார். பின் அவரும் பேசி விட்டு கிளம்பினார். கிளம்பும் நேரம் காவ்யாவை பார்த்த அந்த தோழி ஒரே குழப்பத்தில் இருந்தார். இவரை எங்கேயோ பார்த்து இருப்பது போல் தோன்றியது. அனல் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…