ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இருங்கினார். அவரை பார்த்ததும் வீட்டில் அனைவரும் பதட்டத்தில் ஆளுக்கு ஒரு vmkelvi கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு வார்த்தை யாரிடமாவது சொல்லி இருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் காவ்யா தான் படிக்க தான் சென்றேன் எதற்கு பயப்பட வேண்டும்? நான் என்ன சின்ன குழந்தையா? துலைந்து போக என சாதாரணமாக கேட்டார். இந்த நிலையை பயன்படுத்தி தேவி காவ்யாவை பற்றி தவறாக பேச ஆரம்பித்தார். இந்த வீட்டில் நீ வாழ வேண்டும் என்றால் இந்த வீட்டில் இருக்கும் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும் என்றார். அதற்கு காவ்யா எதிர்த்து பேசினார். இதனால் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் பார்த்திபனை எதற்காக என்னை தேடி அலைய வேண்டும் என்று கேட்டார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் எரிச்சல் அடைந்தார்கள். பின் பிரியா காவ்யாவிடம் தனியாக பேசினார். நீ இந்த வீட்டில் மூத்த மருமகள் அந்த பொறுப்போடு இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் காவ்யா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…