Eeramana Rojave 2 Today Episode | 13.06.2022 | Vijaytv
eeramana Rojave 2. 13.06.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் வகுப்பு முடிந்தாலும் எதையோ பற்றி யோசித்துக்கொண்டே அங்கேயே அசந்து தூங்கி விட்டார். வீட்டில் சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடுகள் நடந்தது. மஹாவுக்கு இன்னும் காவ்யா வரவில்லையே என்றபதட்டம் இருந்தது. அந்த நேரம் பார்த்து மஞ்சுளா பார்த்திபன் காவ்யாவின் திருமண ஆல்பம் எரிந்து இருப்பதை வந்து காமித்தார். அதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நல்ல நாள் அதிவுமாக இப்படி ஒரு அப்சகுணம் நடக்கிறதே என்று பதறினார்கள். ஆனால் தேவி இதை கண்டிப்பாக காவ்யா தான் செய்து இருப்பாள். இதை செய்து விட்டு வீட்டை விட்டு ஓடி விட்டாள் என்று கூறினார். ஆனால் அதை கேட்ட பார்த்திபன் கோவத்தில் கத்தினார். காவ்யா அப்படி செய்யும் ஆள் இல்லை என்று கூறினார். மேலும் தேவி அவளுக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லை அதனால் தான் அவள் இப்படி ஒரு வேலையை செய்து வைத்து விட்டு ஓடிவிட்டாள் என்று கூறினார். அருணாச்சலம் உடனே காவ்யாவை அழைத்து வா என்று கூறினார். அதற்கும் தேவி இன்று இரவுக்குள் காவ்யா வரவில்லை என்றால் அவளுக்கு இந்த வீட்டில் இடம் இல்லை என்றார். அதே நேரம் காவ்யா இருப்பதை கவனிக்காமல் வாட்ச்மேன் அந்த அறையை பூட்டி விட்டு சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…